நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

By Sankar Velu

Published:

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உரிய காலத்துல என்னென்ன நடக்கணுமோ அது சரியாக நடக்கணும். அப்படி நடக்கலைன்னா ஏதாவது ஒரு பிரச்சனை இருக்குன்னு நம்மளே முடிவு பண்ணிடுவோம். உரிய காலத்துல கல்யாணம் நடக்கல, உரிய காலத்துல குழந்தை பிறக்கலன்னதும் ஏதாவது ஒரு தோஷம் இருக்குன்னு தேடிக் கண்டுபிடிச்சா கடைசியில அநேகமான பேருக்கு இருப்பது நாகதோஷம் தான். இதை நிவர்த்தி செய்வதற்கு நிறைய வழிபாடுகள் இருக்கு.

இந்த தோஷத்துக்கு என்ன காரணம்னு பார்த்தா ஒரு காலத்துல நம் முன்னோர்கள் பாம்பை அடிச்சிருப்பாங்க. வயல் சார்ந்த வாழ்க்கை. ஏதாவது ஒரு இடத்துல பாம்பு வரும். அதுல பிரச்சனையாகும். அப்போ அடிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் இருக்கு. அது இல்லாம சில வம்சத்தின் வழி வருவோருக்கு அந்த நாகத்தின் சாபம் இருக்குன்னு சொல்வாங்க. அதே சமயம் வரமும் இருக்கும். அந்த மாதிரி இருந்தா அது நாக தோஷமாக மாறி விடுகிறது.

இந்த நாகதோஷம் என்பது ராகு, கேது சரியில்லன்னா நாம எப்படி இந்த நாகத்தை வழிபாடு செய்றோமோ அதே மாதிரி வழிபாடு செய்யணும். அந்த நாகத்தை வழிபட பல நாள்கள் இருந்தாலும் இந்த நாள் தான் சிறப்புக்குரியது. இந்த நாகசதுர்த்தி, கருடபஞ்சமிங்கற நாள் தான்.

Nagasathurthi
Nagasathurthi

நாகசதுர்த்தி 8ம் தேதியும், கருடபஞ்சமி 9ம் தேதியும் வருகிறது. நாகசதுர்த்தி அன்று இரவு 11.47 மணி வரை உள்ளது. அதே போல பஞ்சமி 9ம் தேதி முழுக்க இருக்கு. ஆக இந்த 2 நாளுமே நமக்கு சிறப்பான நாள்கள். நாகசதுர்த்தி அன்று காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரையும், 10.35 மணி முதல் 11.30 மணி வரையும் வழிபடலாம்.

இந்த 2 நேரமும் இல்லாமல் இன்னொரு சிறப்பு நேரமும் இருக்கு. ராகு காலம் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை உள்ளது. இந்த நேரத்திலும் நாக சதுர்த்தி வழிபாட்டை செய்யலாம். கருட பஞ்சமி அன்று காலை 9 மணி முதல் 10.20 மணி வரையும், மதியம் 12.05 மணி முதல் 1.05 மணி வரையும் கருட பஞ்சமி வழிபாட்டை செய்யலாம். நாகசதுர்த்தியில் ராகு காலம் வழிபடுவது சிறப்பு.

அப்போது கோவில் நடை சாத்தியிருந்தால் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசமரத்தின் அருகில் உள்ள நாகர்சிலை இருந்தால் அந்த நேரத்தில் போய் வழிபடுங்க. அங்கு போய் பால், மஞ்சள் அபிஷேகம் பண்ணுங்க. அதற்காக கடவுளின் சன்னதியை அசுத்தமாகி விடாம சுத்தமாக வைத்து விடுங்க.

அப்போது மனதார எங்க வம்சத்துல உள்ளவங்க யாராவது தெரியாம நாகர் உலகத்துல இருக்குறவங்களுக்குத் துன்பம் விளைவித்திருந்தா அதிலிருந்து எனக்கு விடுதலையைக் கொடு. கல்யாணம் ஆகணும். குழந்தையைக் கொடுன்னு வேண்டுங்க. உபவாசம் இருக்க முடியும் என்பவர்கள் இருக்கலாம். வீட்டில் நாக உருவம் வரைந்தும் வழிபடலாம். வெள்ளியில் உள்ள நாகர் உருவத்துக்கு அபிஷேகம் பண்ணியும் வழிபடலாம்.

கடவுள் உருவத்தில் நாகர் உருவம் இருந்தால் பாலை வைத்து வழிபடுங்க. அந்தப் பால் மண்ணில் படுமாறு மரத்தடியில் கொண்டு போய் 2 ஸ்பூன் ஊற்றுங்க. பூந்தொட்டி மண்ணிலாவது ஊற்றுங்க. பால், பழங்கள், இனிப்பு வகைகள் என ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுங்க.

மனதில் திடீர் பயம், நடுக்கம், நாகதோஷம், திருமண தடை, குழந்தை பேறுக்கான தடை எல்லாம் நீங்கும். வெள்ளிக்கிழமை கருடபஞ்சமியில் கவுரியை நாம் வழிபடணும். இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சிறப்பு. ஏன் கௌரியை வணங்கணும்னா அவள் நாகாபரணம் அணிந்த ரூபினியாக விளங்குகிறாள்.

கருடனின் படம் இருந்தாலும் வழிபடலாம். இல்லாவிட்டால் அம்பாள் படம் வைத்து வழிபடலாம். அவள் தான் கௌரி. பெருமாளின் படத்தில் கருடன் இருந்தாலும் வழிபடலாம். நாராயண மந்திரம், காயத்ரி மந்திரங்களையும் செய்யலாம். சிவப்புக் கயிற்றில் பத்து முடிச்சு போட்டு கருடனுக்கு வலப்பக்கத்தில் அந்தக் கயிறு இருக்குற மாதிரி வச்சிடுங்க.

பூஜை முடிந்ததும் இதை ரட்சையாக நாம் கட்டிக்கலாம். இதைப் பயப்படுபவர்கள் யாராக இருந்தாலும் கட்டிக்கொள்ளலாம். மனதில் அச்சம் எந்த வகையில் இருந்தாலும் நீங்கும். வாகனத்தில் செல்பவர்கள் விபத்தின்றி வரவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நமது திருஷ்டிகளும் நீங்கும்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.