மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக அனுபவத்தை அனுபவிக்கலாம். முதல் பாடலில் திருப்பாவையில் ஆண்டாள் மார்கழித்திங்கள் என்று ஆனந்தமாய் தோழியை எழுப்பி கடவுளைத் தொழ வருமாறு அழைத்தாள்.
சாமியைக் கும்பிடுவது என்றால் நான் அப்படி கும்பிடுவேன். அந்தக் கோவிலுக்குப் போவேன். இந்தக் கோவிலுக்குப் போவேன்னு சீன் போடுவாங்க. ஆனா போவாங்க. ஆனா உள்ளுக்குள் பக்தி இருக்கான்னு கேட்டா இருக்காது. அவ்ளோ பக்தியா இருந்தா அவர்களது செயல் காண்பித்து விடும்.
அதனால் வாய் ஜம்பம் மட்டும் இல்லாமல் உணர்வோடு நம்மால் என்ன முடியுதோ அதை இறைவனிடம் காட்ட வேண்டும். இதைத்தான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையின் 2வது பாடலான பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் என்ற பாடலில் சுட்டிக் காட்டுகிறார்.
அதே போல ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் ‘வையத்துள் வாழ்வீர் காள்’ என்ற பாடலில் அருமையாக இதைச் சொல்கிறார். என்னவென்றால்
நான் இறைவனை அடைவதற்கான பாவை நோன்பைத் துவங்கி இருக்கிறேன். இதுல என்ன செய்யணும். என்ன செய்யக்கூடாது? பக்தி என்பது பக்தியாகவே போகலாம்.
ஆனால் அது வைராக்கியமாக மாறும்போது உலகறிந்த பக்தர்களாக மாறுகிறார்கள். அவர்கள் வைராக்கியமாக இருப்பதற்கு என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது என்று ஆண்டாள் நாச்சியார் தெளிவாக சொல்கிறார். எளிமையான ஆகாரம் மட்டும் சாப்பிட வேண்டும். தீய எண்ணம், தீய செயல், தீய சிந்தனை என எதுவுமே நாம் வழிபடும்போது இருக்கக்கூடாது.
நாம் பிறரை வாழ்த்திப் பேசுவதும், இறைவனை வாழ்த்துவதுமே செயலாகக் கொள்ள வேண்டும். இந்த மாதம் முழுவதும் பழகினால் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது எளிதாகி விடும். இதுதான் பக்தி வைராக்கியம். கோவிலுக்குச் செல்லும்போது நாம் தவிர்க்க வேண்டியது 3 விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று புறம் பேசுதல் கூடாது. இறைவனைப் பற்றிய சிந்தனை தான் இருக்க வேண்டம். முக்கியமாகக் கோவிலில் பேசவே கூடாது.
இறை நாமத்தையும், இறைவனைப் பற்றிய மந்திரத்தையும் மட்டுமே சொல்ல வேண்டும். கோவிலில் எவ்வளவு காலதாமதம் ஆனாலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
கோவிலில் நிலம் அதிர ஓடக்கூடாது. வரிசையில் நிற்கும்போது இடையில் நாலு பேர் நுழைவாங்க. நமக்குக் கோபமாக வரும். அவர்களிடம் அதைக் காட்டாமல் நாகரிகமாகக் கேட்கலாம். கோவிலுக்குப் போறதே மன அமைதிக்குத் தான்.
அங்கு பிரச்சனையை உண்டாக்க அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவிலில் கொடுக்கிற பொருள்களை வீணாக்கக்கூடாது. பிரசாதம், மங்கலகரமான பொருள்களான மஞ்சள், குங்குமம், விபூதி, தீர்த்தம் எதையும் அலட்சியப்படுத்தக்கூடாது.
விபூதியை அங்கேயே ஒரு மூலையில் அல்லலது தூணில் கொட்டிவிடக்கூடாது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.