இறைவனை அடைய எவ்வளவோ வழி இருக்கிறது.. ஆனால் நமக்கெல்லாம் போகத்தான் மனமில்லை.. என் இறைவா. ! சிவபெருமானே..! என் குடியே கெட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு நான் சேர மாட்டேன்.. எனக்கு இந்திரலோகமும் வேண்டாம்.. திருமால் வாழும் பரமபதமும் வேண்டாம்.. பிரம்மன் வாழும் சத்ய லோகமும் வேண்டாம்.
எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால் இவற்றில் எதுவும் வேண்டாம்.. என்னடா இது எல்லோரும் இறைவனிடம் வேண்டும் வேண்டும் என்று தானே கேட்பார்கள்.. இவன் என்னவென்றால் வேண்டாம் வேண்டாம் என சொல்கிறானே.. வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் மாணிக்கவாசகர் அந்த ரீதியில்தான் இறைவனை வேண்டியுள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா? என பலருக்கும் கேட்க தோன்றும்.. ஆம்..மாணிக்க வாசகர் சொல்கிறார்.
இறைவா…! உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம் என்கிறார். இவர் இப்படி சொல்வதன் காரணம் இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை. மேலும் அடியார் அல்லாதவரோடு சேராமல் அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை. ஆக நமக்கெல்லாம் இறையருள் என்ற ஒன்று இருந்தால் போதும். வேறு எதுவும் நமக்கு தேவையில்லை.. எத்தனை துன்பம் வந்தாலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்..
ஆகவே இறைவன் மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டு அவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அப்புறம் எத்தகைய துன்பம் ஆனாலும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



