இந்துக்களின் விசேஷ தினங்களில் மிக முக்கியமான ஒன்று மகாசிவராத்திரி. இது வரும் பிப்ரவரி 15ம் தேதி வருகிறது. எத்தனையோ சிவ வழிபாடுகள் இருந்தாலும் மகாசிவராத்திரிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? இது ஒரு சக்தி வாய்ந்த நாள்.
சிவபெருமானின் பரிபூரண அருளை நமக்குப் பெற்றுத் தரும் நாள். பல பிறவிகளில் செய்த பாவங்களில் இருந்தும், அதனால் ஏற்படும் துன்பங்களில் இருந்தும் நாம் விடுபடணும்னா இந்த மகாசிவராத்திரி நாளில் சிவநாமங்கள் சொல்லிக்கொண்டு விரதம் இருந்து கண்விழித்து நாம் வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த நாள் இதுதான்னு சொல்றாங்க.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டதால தேவர்கள் அனைவரும் ஒரு ராத்திரி முழுவதும் விழித்து இருந்து சிவபெருமானை வழிபட்டார்கள். அதனால் சிவராத்திரி வந்ததாகவும் கூறுவர். பார்வதி தேவி சிவபெருமான்கிட்ட இருந்து வரத்தைப் பெறுவதற்காக இரவு முழுவதும் கண்விழித்து விரதம் மேற்கொண்டு சிவவழிபாடு செய்தார் என்றும் அதனால் அந்த நாளை மகாசிவராத்திரியாகக் கொண்டாடுவது உண்டு என்றும் சொல்வார்கள்.
அக்னி லிங்கம் தோன்றிய நாள் என்றும் சொல்வதுண்டு. இந்த மகாசிவராத்திரி அன்று சிவவழிபாட்டை நாம் மேற்கொண்டால் நம் மனமும், ஆரோக்கியமும் புதிய ஆற்றலைப் பெறுகிறது.
அது எப்படின்னா மகாசிவராத்திரியில் விரதம் இருந்து வழிபடுவதால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்குது. கர்மாக்களில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுகிறோம். இன்று நம்மில் பலரும் சகல வசதிகள் இருந்தும் நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கிறார்கள். சதா துன்பங்களில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.
இதெல்லாம் எதனால் என்றால் கர்மாக்கள் தான். முற்பிறவிகளில் செய்த பாவங்களால்தான் நாம் அனுபவித்து வருகிறோம். இதைக் கருடபுராணம் அழகாக சொல்கிறது. அந்த வகையில் இந்த பாவங்களில் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தால் முக்தி கிடைக்கும். அதற்கு புதிய ஆற்றலைப் பெறக்கூடிய நாள் தான் இந்த மகாசிவராத்திரி.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.




