இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!

மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை…

மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை செய்ய மறந்தவர்களுக்கு ஒரு அற்புதமான காலம் தான் மகாளயபட்ச காலம். இந்த அமாவாசை வழிபாடு செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு பார்க்கலாம்.

நமது முன்னோர்கள் எப்பவுமே நாம நல்லாருக்கணும்னுதான் நினைப்பாங்க. யாருமே சாபம் இடணும்னு நினைக்க மாட்டாங்க. ஆனால் அவர்களுக்கு நாம செய்யத் தவறி இருந்தால் சின்ன மன வருத்தம் இருக்கும்.

அந்த வருத்தம் கூட இல்லாமல் நாம் அவர்களுக்கு சரியாக செய்யக்கூடிய காலம் தான் இந்த மகாளயபட்ச காலம். இதுவரை செய்யவே இல்லை. பழக்கம் இல்லை என்பவர்கள் இதைச் செய்யலாம். மகாளய அமாவாசை அன்று காலையில் கோவிலுக்குப் போய் தர்ப்பணம் செய்யலாம். வீட்டிலும் எள்ளும், தண்ணீரும் இறைக்கலாம். அதைக் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும். அதன்பிறகு இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அமாவாசை விரதத்தை மேற்கொள்ளலாம்.

காலை முதல் மதியம் வரை பட்டினியாக இருக்கலாம். அல்லது உடல்நிலைக்கேற்ப எளிமையான விரதம் இருக்கலாம். 21.9.2025 அன்று முழுவதுமே அமாவாசை உள்ளது. தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கொடுக்கலாம். மதியம் படையல் போடுவதற்கு காலை 11 மணி முதல் 11.45 மணி வரை போடலாம்.

அல்லது மதியம் 1.35 மணி முதல் 2 மணிக்குள் இலை போட்டு படையல் செய்யலாம். அமாவாசை இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தான் (21.9.2025) அமைந்துள்ளது. ஞாயிறு சூரியனுக்கு விசேஷமான நாளில் அமாவாசை வருவதால் இது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.