புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள் வரும். மற்ற நாள்களில் அன்னதானம் பண்ண முடியாவிட்டாலும் இந்த நாளில் ஒரு 2 பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுங்க.
ஏன்னா இந்த காலத்தில் தான் எமதர்மனை நாம் வழிபட்டு என் முன்னோர்கள் ஏதாவது தவறு இழைத்து இருந்தால் அவர்களை மன்னித்து அவர்கள் ஏதாவது துன்பப்பட்டு இருந்தால் அவர்களின் வேதனையைப் போக்கி தயவுசெய்து அவர்களுக்கு நல்வழி காட்டுங்க. இனி வரும் என் சந்ததியினருக்கும் நல்வழி காட்டு. நல்ல மரணத்தைக் கொடு. ராத்திரி படுத்தாரு. காலையில எழுந்திருக்கல. இதுதான் நல்ல மரணம்.
எங்களுடைய வாழ்க்கையில எமவாதனை இல்லாமல் வைத்துக் கொள். அப்படின்னு எமதர்மனை பிரார்த்தனை பண்ணி முன்னோர்களுக்காகவும், நமக்காகவும் ஏற்றக்கூடியதுதான் இந்தப் பரணி தீபம்.
இதை எப்போதும் ஏற்றுகிற மாதிரி ஏற்றினால் போதும். வாய்ப்புள்ளவர்கள் சிவபெருமானுக்கு, பெருமாளுக்கு ஏற்றுகிற மாதிரி ஒரு தீபத்தை ஏற்றலாம். இந்த மகாபரணி 12.9.2025 அன்று வருகிறது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
தவற விடுவது மனித இயல்பு. ஆனால் அதை உணர்ந்து கொண்டு அதற்கு அடுத்த வாய்ப்புகளை மிஸ் பண்ணாதவர்கள் ரொம்பவே உஷாரான புத்திசாலிகள். எல்லாருக்கும் வாய்ப்பு வந்து கதவைத் தட்டும். அதை உரிய நேரத்தில் பயன்படுத்துவதுதான் அறிவுடைமை. என்ன ரெடியா?
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



