சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!

மதுரையில் வருடந்தோறும் கோடையில் நடத்தப்படும் ஒரு உற்சவம் சித்திரைத்திருவிழா. இது உலகப் பாரம்பரியமிக்கத் திருவிழா. வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் வந்து இந்த திருவிழாவைக் கண்டு ரசித்து விட்டுச் செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிற்பங்களையும்,…

மதுரையில் வருடந்தோறும் கோடையில் நடத்தப்படும் ஒரு உற்சவம் சித்திரைத்திருவிழா. இது உலகப் பாரம்பரியமிக்கத் திருவிழா. வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் வந்து இந்த திருவிழாவைக் கண்டு ரசித்து விட்டுச் செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும், திருமலைநாயக்கர் மகால், அழகர் கோவில் போன்றவற்றின் தல வரலாறுகளையும் ஆர்வமுடன் பார்த்து இறைவனைத் தரிசித்து விட்டுச் செல்வார்கள்.

ஒரு மாதம் தங்கி இருந்து பல சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டுச் செல்வார்கள். மதுரை சித்திரை திருவிழாவைப் பொருத்தவரை ஒரு மாத காலம் கோலாகலமாக நடக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான விழா என்றால் அது இந்த சித்திரை திருவிழா தான்.

தினம் தினம் இறைவனைப் பல விதங்களில் தரிசிக்கும்போது நமக்குள் ஒரு இனம்புரியாத பேரின்பம் உண்டாகும். நம் மனபாரம் குறைய இந்தப் பக்தர்களின் வெள்ளத்தில் நீந்தி பல்லக்கில் வரும் இறைவனைத் தரிசித்தாலே போதும். அந்த வகையில் இந்த சித்திரை திருவிழாவின் நிகழ்ச்சிகள் பற்றிப் பார்க்கலாம். ஏப்ரல் 29ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

மே 6ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 9ம் தேதி திருத்தேரோட்டம், மே 10ம் தேதி கள்ளழகர் புறப்பாடு, மே 11ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை, மே 12 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அந்த வகையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி என்றால் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதும்தான். இந்த ஆண்டும் இந்த இரு நிகழ்ச்சிகளையும் மிஸ் பண்ணிடாதீங்க பக்தர்களே. சென்று இறையருளைப் பெற்று வாருங்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் படுஜோராக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.