தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!

கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு…

lord muruga

கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது.

கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு அதிதேவதை முருகப்பெருமான். அதனால்  செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். அதிலும் குறிப்பாக சொந்த வீடு அமைவது, கடன் பிரச்சினை தீருவது போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக செவ்வாய்க்கிழமை வழிபாடு திகழ்கிறது.

இந்த வழிபாட்டிற்கு செவ்வாய் பகவானுக்கு உகந்த சில பொருட்கள் நமக்கு வேண்டும். முதலில் செவ்வாய் பகவானுக்குரிய சிவப்பு நிற துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிவப்பு நிற மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை வைப்பது நல்லது. அடுத்ததாக இதில் அச்சு வெல்லத்தை வைக்க வேண்டும். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமை சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். நேராக முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை கையில் வைத்துக் கொண்டு முருகப்பெருமானை ஆறு முறை வலம் வர வேண்டும். வலம் வந்த பிறகு அந்த ஆலயத்திலேயே ஒரு இடத்தில் அமர்ந்து அந்த மூட்டையை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்னென்ன கடன் பிரச்சனை இருக்கிறதோ அவை அனைத்தையும் முருகப்பெருமானிடம் கூறுவது போல் கூறி அவை அனைத்தும் நீங்க வேண்டும், நிவர்த்தி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். அல்லது ஏதாவது ஒரு மரத்தின் அடியில் இந்த மூட்டையை வைத்து விட்டு வர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 4 வாரங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி கிடைக்கும்.