முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?

முருகப்பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான உருவம். அம்சமான வேல். அழகுமயில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பும் கோஷம். நம்மை மெய்மறக்கச் செய்யும் முருகனின் தரிசனம். அப்பேர்ப்பட்ட…

முருகப்பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான உருவம். அம்சமான வேல். அழகுமயில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பும் கோஷம். நம்மை மெய்மறக்கச் செய்யும் முருகனின் தரிசனம். அப்பேர்ப்பட்ட முருகப்பெருமானுக்கு மயில் தானே வாகனமாக உண்டு. அப்புறம் எப்படி 3 வாகனங்கள்? வாங்க பார்க்கலாம்.

மும்மலங்களையும் அடக்கி அருள்பவன் எம்பெருமான் முருகன்தான். அறுபடை வீடுகளுக்குச் சொந்தக்காரன். அனைவரின் உள்ளங்களிலும் இவனுக்கு என்று ஒரு இடம் உண்டு. அப்பேர்ப்பட்ட முருகக்கடவுளுக்கு 3 வாகனங்கள் உண்டு. அது என்னன்னு தெரியணுமா? மயில்தான் வாகனம் என பலருக்கும் தெரியும். அடுத்து என்னென்னன்னு பலருக்கும் தெரியாது.

அடுத்து யானை, ஆட்டுக்கிடா தான். தேவர்களுக்கு அருள் செய்த தலைவன் தான் முருகன். அவன் எப்போதும் ராஜகம்பீரத்துடன் இருப்பான். அதனால் தான் அவனுக்கு யானை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அது சரி. அந்த ஆட்டுக்கிடா எப்படி வந்ததுன்னு தானே கேட்கிறீர்கள்? ஒரு சமயம் நாரதர் வேள்வி செய்தார். அதில் மந்திரங்களைத் தவறாக உச்சரித்து விடுகிறார். அதனால் யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமை கொண்டது அந்தக் கிடா.

அது விண்ணுலகையும், மண்ணுலகையும் அச்சுறுத்தியது. அதனால் தேவர்கள் முறையிட்டனர். முருகர் வீரபாகு தேவரை அனுப்பி அந்தக் கிடாவைப் பிடித்து வரச் செய்து அதை அடக்கச் செய்து தன் வசமாக்கினார். மயில் ஆணவம், யானை கன்மம், ஆடு மாயை எனக் கொண்டால் மும்மலங்களையும் அடக்கி ஆள்பவனே முருகன் என்று சொல்லலாம்.