வரும் பிப்ரவரி 15ம் நாள் மகாசிவராத்திரி. நான்கு கால பூஜைக்கும் விழித்திருந்து வழிபடுவது சிறப்பு. அதிலும் இந்த லிங்கோத்பவர் காலம் மிக முக்கியமானது. அது பற்றி பார்க்கலாமா…
சிவராத்திரி அன்று இரவு முழுக்க கண்விழிக்கிறதுல தான் நிறைய பேருக்கு பிரச்சனையே வருது. கோவிலுக்குப் போனா நிறைய பேரைப் பார்க்கலாம். நிகழ்ச்சி நடக்கும். பூஜையில் கலந்து கொள்ளலாம். தூக்கம் வராது. வீட்டில் இருப்பவர்கள் நாலு கால பூஜை பண்ணுங்க. திருவாசகம் முற்றோதுதல் படித்தால் கண்டிப்பாகத் தூக்கம் வராது.
3ம் காலம் அம்பாள் பூஜை செய்த காலம். நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பிக்கும். 11.45 மணி முதல் 12.30 மணி வரைக்கும் விழித்திருக்க வேண்டும். இதுதான் சர்வசக்தி படைத்த அம்பிகை இறைவனை நெருப்பு வடிவமாக, சுவாமி லிங்கோத்பவராகக் காட்சி கொடுத்த அந்தக் காலம். இறைவன் அடிமுடி காணாத பெருமானாக நிற்கிறார்.
லிங்கோத்பவர் காலம் இதுதான். இதில் தான் அம்பாள் நெருப்பு வடிவமாக இருக்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்கிறாள். இந்த நேரம் சிவராத்திரி அன்று மிக மிக மிக முக்கியமான நேரம். இந்த நேரத்துல தூங்கக்கூடாது. ஒரு தீபமாவது நாம சிவ லிங்கத்துக்கு வச்சி வழிபடணும்.
சிவராத்திரி அன்று இரவு முழுக்க விழித்து விட்டு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு பட்டினி விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அதன்பிறகு தூக்கம் செமயா வரும். ஆனால் அப்படி தூங்கி விடக்கூடாது. இதுதான் சிவராத்திரியின் மிக முக்கியமான காலம். அன்று முழுவதும் விழித்து இருந்து மாலை 6 மணிக்கு விளக்கேற்றி விட்டு சிவபுராணம் பாராயணம் பண்ணிட்டு அதன்பிறகு தூங்கலாம். இதுதான் முழுமையான விரதம்.
இதை மறந்துடாதீங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கயர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.




