இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!

கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…

koil valipadu

கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன் அருளால் அமையும் துணையுடன் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருப்பதே இனிய இல்லறம். சோகமாக இருக்கும் போது சிறிய துன்பம் கூட பெரிய துன்பமாகத் தெரியும். மகிழ்ச்சியாக இருக்கும் போது எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் சாதாரண துன்பமாகத் தெரியும்.

எண்ணங்கள் எண்ணிலடங்காமல் அலைபாயும் மனதை கவனித்து எண்ணும் எண்ணங்களை சிறிது, சிறிதாக குறைக்க வேண்டும் . ஓர்நாள் நிச்சயம் மனம் சலனமில்லாமல், எண்ணங்களில்லாமல் இருக்கும் நிலை வரும். பேரின்ப அமைதி கிடைக்கும் .அனைத்து தவறுகளையும் செய்து விட்டு, எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு. உங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் நம் எண்ணப் படி நடக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

இளம் வயதில் நமக்கு வசதி வாய்ப்பு இல்லை என்று வருத்தப் பட்டோம் ஆனால் மகிழ்ச்சியாக மனக் கவலை இல்லாமல் வாழ்ந்தோம். இன்று வசதி வாய்ப்பு கிடைத்த பிறகு மகிழ்ச்சி காணாமல் போய் விட்டது. ஒவ்வொரு உறவிலும், ஒருவருக்கு ஒருவர் மரியாதையாகவும் நம்பிக்கையுடனும் நடந்து கொண்டால், உறவில் விரிசல் வராது.

இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம் மன அமைதி மட்டுமே வேண்டுமேன்று தொடர்ந்து இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.
உங்கள் மனமும், வாழ்க்கையும் பொருள் அறியத் தொடங்கும் பிரச்சனை வரும் நேரங்களில், சிலருக்கு பேசுதல் ஆறுதல். சிலருக்கு அழுகை ஆறுதல். சிலருக்கு கோபம் ஆறுதல். சிலருக்கு மெளனம் ஆறுதல்.

பலருக்கும் அடுத்தவரிடம் இருப்பது மட்டுமே சிறப்பாய் தெரியும். தம்மிடம் இருப்பதின் மகிமையை உணர்ந்து கொள்வதில்லை. ஒன்றும் செய்யாமல் முடங்கிக் கிடப்பதை விட, சிறு சிறு முயற்சி செய்வது சிறப்பு. நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும். உழைப்பு அனைத்தையும் உயர்வாகக் காட்டும். பக்தி அனைத்தையும் இறை செயலாகக் காட்டும். வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும் .