கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என தெரியுமா?! தீமை எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றதோ! அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பூமியில்…

நம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என தெரியுமா?!

7abdee2347bef0839cfe3e8b3a3933b0

தீமை எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றதோ! அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பூமியில் அவதரிப்பது வழக்கம். கம்சனின் தங்கை தேவகி. தன் தங்கையின்மேல் உயிரையே வைத்திருந்தான் கம்சன். தேவகியை வசுதேவருக்கு மணமுடித்தான். தேவகி ஆசைப்பட்டாளெ என பூப்பறிக்க சென்ற கம்சன், அங்கிருந்த புற்றின்மேல் ஏறி நிற்க, புற்றினுள் இருந்த முனிவரின் தவம் கலைய, எந்த தங்கைக்காக பூப்பறிக்க வந்து எனது தவத்தை கலைத்தாயோ! அந்த தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிர் போகும் என சாபமிட்டார்.

73e25c112e8c8d2dcb4ad06b1180c5ec

உடனே, வசுதேவரை கொல்ல வாள் ஓங்கும்போது தேவகி குறிக்கிட்டு தனக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும், கம்சனிடம் ஒப்படைப்பதாக வாக்கு தரவே, தேவகி, வசுதேவரை உயிருடன் விட்டதோடு அவர்களை சிறையில் அடைத்து வைத்தான். காவலர்களை சிறைவாசலில் இருக்குமாறு கட்டளை இட்டான். ஒருவேளை சிறை காவலர்கள் தவறு செய்தால்?! அரசக்குமாரி தேவகி என்ற இரக்கத்தினால் குழந்தை பிறந்தால் சொல்லாமல் விட்டால் தந்து உயிருக்கு ஆபத்தாச்சே என எண்ணிய கம்சன் சிறைவாசலில் ஒரு கழுதையை கட்டி வைத்தான். ஏனெனில் கழுதைக்கு நுகரும் திறன் மிக அதிகம். இதனால் புதிய வாசனை வந்ததும் அது கத்தத்துவங்கி விடும்.

அவன் எண்ணியபடியே, குழந்தை பிறந்ததும், புது வாசனையை நுகர்ந்த கழுதை கத்த துவங்கும்.. உடனே அங்கு வரும் கம்சன் அந்த பிஞ்சு குழந்தையை கொண்று விடுவான். இப்படியே ஏழு குழந்தைகளை கம்சன் கொன்று விட்டான்.

எட்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த தேவகிக்கு பிரசவ வலி உண்டானது. மாய சக்தியால் சிறைக்காவலர்கள் அனைவரும் மயங்கினர். குழந்தை பிறக்கும் போது வரும் வாசனையால், கழுதை கத்தி கம்சனிடம் காட்டி கொடுத்துவிடும் என நினைத்த, கழுதையின் காலைப் பிடித்து தயவு செய்து கத்தி காட்டி கொடுத்து விடாதே! என வசுதேவர் கெஞ்சினான். இதனால் கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ண அவதாரமும் நிகழ்ந்தது.

அன்றிலிருந்து, காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதையானாலும் காலைப்பிடி என பழமொழி வந்தது. இந்த நிகழ்வை விளக்கும் வகையில் வசுதேவர் கழுதையின் காலைப்பிடித்துக் கெஞ்சுவது போன்ற சிற்பம் கர்நாடகாவில் உள்ள அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரர் கோயில் வெளி சுவற்றில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன