மனிதனின் நிழல்போல வருவது அவனுடைய கர்மா. அவனது கர்ம வினைப்படியே எல்லாம் நிகழும். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் கர்ம வினைகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
இந்த மந்திரத்தினை வியாழக்கிழமை அன்று சிவன் கோயிலிற்கு சென்று மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் 21 முறை ஜபிப்பது நல்லது. அதன் பிறகு இரவு ஒன்பது மணிக்கு முன்பாக வீட்டில் இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து தட்சிணாமூர்த்தி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். அன்றிலிருந்து தினமும் 27 , 54 , 108 என்ற எண்ணிக்கையில் ஏதோ ஒரு எணிக்கையில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். அசைவம் சாப்பிடக்கூடாது அதுமட்டுமே நிபந்தனை. மற்றபடி பெரிதாய் விரதம் எதுவும் இருக்க தேவையில்லை. இப்படி செய்து வந்தால் நமது கர்ம வினைகளிலிருந்து தப்பிக்கலாம்.