இன்று காரடையான் நோன்பு: பெண்கள் கட்டாயம் சொல்லக்கூடிய மந்திரம் இதுதாங்க!

கணவன் நல்லா இருக்கணும். தீர்க்காயுசா இருக்கணும் என்பதற்காக மனைவி விரதம் இருந்து வழிபடும் நாள். இது அந்தக் காலத்தில் எமனிடம் இருந்து தனது கணவனை மீட்ட சாவித்ரியின் கதையை நினைவூட்டுகிறது. இந்த நாளில் காமாட்சியாக…

கணவன் நல்லா இருக்கணும். தீர்க்காயுசா இருக்கணும் என்பதற்காக மனைவி விரதம் இருந்து வழிபடும் நாள். இது அந்தக் காலத்தில் எமனிடம் இருந்து தனது கணவனை மீட்ட சாவித்ரியின் கதையை நினைவூட்டுகிறது.

இந்த நாளில் காமாட்சியாக அம்பிகையை வழிபாடு செய்யலாம். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் பட்டினி விரதம் காலை முதல் மாலை வரை இருக்கலாம். இந்த காரடையான் நோன்பு இன்று கடைபிடிக்கப்படுகிறது. 14.3.2026 அன்று காலை 7.35 மணி முதல் 8.20 வரை தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம். மாலை 6 மணி முதல் 8மணி வரை தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம்.

நள்ளிரவு 1மணிக்குத் தான் பங்குனி பிறக்கிறது என்பதற்காக இரவு 9 மணி முதல் 10 மணி வரை கூட இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். கண்டிப்பாக சரடு மாற்ற வேண்டுமா என்றால் அவசியம் இல்லை. வழக்கம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். நெய்விளக்கு ஏற்றி காமாட்சி அம்மனை வழிபாடு செய்து என்னோட கணவர் தீர்க்காயுளா இருக்கணும்.

நானும் என் கணவரும் ஒற்றுமையாக இருக்கணும்னு வழிபாடு செய்து கொள்ளலாம். கார அடையை செய்து நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த நாளில் ”உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி பெண்கள் வழிபட வேண்டும்.

கணவரிடம் இருந்து மஞ்சள் சரடைக் கட்டிக்கிட்டு தாலியில் மஞ்சள், குங்குமம் வைத்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளலாம். சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலப் பை கொடுக்கலாம். மூத்த சுமங்கலிக்கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.