சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!

கணக்கன்பட்டி சுவாமிகள் நாம் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த ஒரு சித்தர். இவரை அழுக்கு மூட்டை சித்தர்னும் சொல்வாங்க. இவர் 2014ல் தான் முக்தி அடைந்தாராம். இவர் இறந்து 3 நாள்களாக இவரது உடல் அழுகாமல்…

கணக்கன்பட்டி சுவாமிகள் நாம் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த ஒரு சித்தர். இவரை அழுக்கு மூட்டை சித்தர்னும் சொல்வாங்க. இவர் 2014ல் தான் முக்தி அடைந்தாராம். இவர் இறந்து 3 நாள்களாக இவரது உடல் அழுகாமல் இருந்ததாகவும் சொல்வர். இவர் பொதுவாக எப்போதும் ஒரு மூட்டையை சுமந்த படி செல்வாராம். அதைப் பார்த்து பலரும் ‘ஏன் ஐயா இந்த அழுக்கு மூட்டையை சுமக்கிறீர்கள்?’னு கேட்பாங்களாம்.

‘நானாவது அழுக்கு மூட்டையைத் தான் சுமக்கிறேன். இது எனக்கு வலித்தால் இறக்கி வைத்து விடுவேன். ஆனால் நீ எத்தனை ஜென்மமாக பாவ மூட்டையை சுமக்கிறாய்? அதை எப்போ இறக்கி வைக்கப் போற?’ன்னு கேட்பாராம். அந்த வகையில் அவரை நாடி வரும் பக்தர்களின் பாவங்களையும் சேர்த்து அவர் சுமந்து நாடி வரும் பக்தர்களுக்கு நல்வழி காட்டுவாராம். அதுதான் சிம்பாலிக்காக அந்த அழுக்கு மூட்டையாகவும் சொல்லப்படுகிறது.

கணக்கன்பட்டியார் சுவாமிகள் சமாதியில அமாவாசைக்கு விபூதியும், பௌர்ணமிக்கு சந்தன காப்பும் வைத்து இருப்பார்கள். அதை நாம் வீட்டிற்குக் கொண்டு வந்தால் அது மகத்துவமானது. அது நிறைய நன்மைகள் தேடித்தரும். அதேபோல சுவாமிகள் கோவிலில் மாலை போட்டால் அதைக் கொண்டு வந்து காருக்கோ, வீட்டு நிலையிலோ மாட்டக்கூடாது. அதை சுவாமி ரூமிலேயே கால்படாத இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். கடைசியாக கால் படாத இடத்துல போடணும். அவரது ஜீவ சமாதியில் அமைதியாகவும், சுத்தமாகவும் இருந்து தியானம் செய்ய வேண்டும். நீ அங்கே போனாலே உன்னை ஸ்கேன் பண்ணிடுவாங்க. நீ எதுக்கு வந்துக்க? என்ன காரணம்?

எத்தனை ஜென்மமா வந்துருக்கேன்னு பார்த்துடுவாங்க. நீ போகறதுக்கு முன்னாடியே அவங்க தான் உன்னை வர வைக்கிறாங்க. அங்கே போய் உட்கார்ந்து தியானம் பண்ணினாலே நாம போனா நமக்கு என்ன வேணுமோ அது தானா நடக்கும். அங்க கொடுக்குற அன்னதானம், பிரசாதத்தை சாப்பிடும்போது நம் உடல் சார்ந்த நோய்கள் குணமாகுத. கணக்கன்பட்டியார் பெரிய அளவில் தியானம் பண்ணல. அவருக்கு இயற்கையாகவே உடல் ரீதியாக வந்த மாற்றம். பரிணாமம். முன்ஜென்மத் தொடர்பு. சித்தர்கள் இறக்க மாட்டாங்க.

அவங்க உடல்ல இருந்து ஆன்மாவைப் பிரிச்சிடுவாங்க. அந்த உடல் அழுகாது. அது அப்படியே இருக்கும். அதுக்கு அந்த உயிர் ஆற்றல் இருந்து கொண்டே இருக்கும். அதற்கான வைப்ரேஷன் இருக்கும். கோவில்ல சொல்ற மந்திரம், உச்சாடனம் எல்லாம் அங்கே இருப்பதால அந்த பலன்கள் நமக்குக் கிடைக்கும். அந்த வைப்ரேஷன் நமக்குள் கனெக்ட் ஆவதால் நிறைய மாற்றங்களை நமக்கு உண்டாக்கித் தருது. நாம ஜீவ சமாதியில் தியானம் செய்ற போது நம்மை அறியாமலேயே சிறந்த உணர்வை உணரலாம்.

ஜீவ சமாதியில் பின்பற்ற வேண்டிய முறைகளைப் பின்பற்றினால் நமக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் தான் கணக்கன்பட்டி சித்தர் முக்தி பெற்றார். அந்த நாளில் நாம் வழிபட்டால் ரொம்ப நல்லது. அமாவாசை, பௌர்ணமிகளில் வழிபட்டால் நிறைய பலன்கள் கிடைக்கும். அப்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் நம்மால் அமைதியாக உட்கார்ந்து தியானம் பண்ண முடியாது. சாதாரண நாள்களில் போய் வழிபட்டு வரலாம். மூதாதையர்கள் படத்தோடு சித்தர்கள் படத்தை வைக்கக்கூடாது. பூஜை அறையில் அந்தப் படத்தை வைப்பதற்கான திசை அறிந்து வைத்து வழிபடலாம்.