நமது பாவ புண்ணியக் கணக்குகளை சித்ரகுப்தன் சரிபார்ப்பார்னு சொல்வாங்க. அவரு சரிபார்க்குறாரோ, இல்லையோ நாம தான் நம்மோட கணக்கை முதல்ல சரிபார்க்கணும். அது எப்படி? அது சரி உண்மையிலேயே பாவம், புண்ணியம் என கணக்கு உள்ளதா? இதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேற்று என்ன செய்தோம்? இன்னைக்கு என்ன செய்தோம்னு நமக்கு தெரியணும். இது புரிஞ்சாதான் நாளைக்கு என்ன செய்யணும்கற நோக்கம் வரும். இது இல்லாம என்னவோ பண்ணிக்கிட்டு இருந்தா… என்ன பண்றம்னே தெரியாது. இந்தக் கணக்கை வேறு யாரும் வைக்கவில்லை. இயற்கையே வைக்குது. இதற்குத் தான் நாம கர்மான்னு சொல்வோம்.
இது உங்க உடல்ல… உங்க ரசாயனத்துல எல்லாத்துலயும் சேர்ந்து இருக்குது. எல்லாத்துக்கும் ஒரு ரசாயன மாற்றம் இருக்கு. என்ன பண்ணாலும். இப்படி உட்கார்ந்து நல்ல ஒரு எண்ணம் கொண்டு வந்தாலே அதுக்கு ஒரு ரசாயன மாற்றம் இருக்கு. ஏதோ பயப்பட்ட மாதிரி பண்ணினா அதுக்கு ஒரு ரசாயன மாற்றம் இருக்கு.
பலவிதமான உணர்வு, பலவிதமான எண்ணம், கோபம், பயம், காமம், வெறுப்பு இந்த மாதிரி ஏதோ ஒண்ணு… எந்த உணர்வு, எந்த எண்ணம் வந்தாலும் அதனால ஒரு ரசாயன மாற்றம் நமக்கு நடக்குது.
அதுக்கு எல்லாமே ரெக்கார்டு இருக்குது. பிறந்த நாள்ல இருந்து என்னென்ன பண்ணிருப்பீங்களோ அதுக்கு எல்லாமே ரெக்கார்டு இருக்குது. விழிப்புணர்வா அதுபற்றி உங்களுக்கு அதுபற்றி அறிவு இருந்தா மாற்றுக்கருத்துக்கு எப்படி பண்ணிக்கணுமோ அப்படி பண்றதுக்கு முயற்சி பண்ணுவீங்க.
இல்லேன்னா அதுவே தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்குது. கோபப்படக்கூடாதுன்னு போதனை கொடுத்தாங்க. அதை சொல்றவனுக்கே கோபம் வருது. உங்க அப்பா, அம்மாவோ, உங்க டீச்சரோ யாரோ கோபப்படக்கூடாதுன்னு சொல்றாங்களோ… அவருக்கே கோபம் வருது. ஏன்னா அவருக்கே செயல்படல.
அக்கவுண்ட் பத்தி கவனம் இல்ல. இதுவரைக்கும் எனக்குள்ள என்ன நடந்துருக்குங்கறது தெரியல. கவனமே இல்ல. அதனால எது வேணுமோ அதை உருவாக்க முடியல. எல்லாமே தற்செயலா நடந்து போகுது. உள்கட்டாயத்துனாலே நடக்குது.
இது மனநிலையில இருக்குது. ரசாயனத்துல இருக்குது. இப்ப பைத்தியம் பிடிச்சாலும் மாத்திரை கொடுக்குறாங்க. மாத்திரைன்னா என்ன? ரசாயனம். ஏதோ ஒரு ரசாயனம்… அப்படின்னா உங்க ரசாயனம் சரியில்லாததால தான பைத்தியமே புடிச்சிடுச்சு. அப்படித்தானே. கோபம் வந்துருச்சி. என்னத்துக்கு? உங்க ரசாயனத்தை சரியா வச்சிக்கல.
வெறுப்பு வந்துருச்சே… என்னத்துக்கு? உங்க ரசாயனம் சரியா வச்சிக்கல. ஆனந்தம் இல்லாம இருக்குதே என்னத்துக்கு? ஆனந்தமான ரசாயனம் உருவாக்கிக்கல. எதுக்கு அக்கவுண்டே இல்ல. மற்றவங்க அக்கவுண்ட் வச்சிருக்காங்க. நீங்க எவ்வளவு தடவை அவரு மேல கோபப்பட்டீங்க… எவ்வளவு தடவை தப்பா நடந்தீங்க…ன்னு எல்லாமே அவங்க அக்கவுண்ட் வச்சிருக்காங்க.
உங்களுக்கு அக்கவுண்ட் இல்ல. ஆனா அவங்க வைக்கிறாங்களோ இல்லையோ.. நாம நம்மோட செயலு, எண்ணம், உணர்வு எல்லாமே அக்கவுண்ட்ல வச்சிருந்தா நாளைக்கு நாம எப்படி இருக்கணும்னு நம்மால நிர்ணயிக்க முடியும். நாம வாழ்ற வாழ்க்கை… இருக்குற தன்மையை நம்மால கையில எடுத்துக்க முடியும். இல்லேன்னா எல்லாமே ஏதோ ஒரு கட்டாயத்துனால நடக்குது. தற்செயலா நடக்குது வாழ்க்கை.