வரும் திங்களன்று (4/2/2019)அன்று வரும் தை அமாவாசையை எல்லா பஞ்சாங்கத்திலும் மஹோதயம்” என குறிப்பிட்டுள்ளது.
மஹோதயம் என்றால் என்னன்னு தெரியுமா!?
சாதாரணமாக அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள் அறுபது (60) வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும். உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம் என (தெரிந்ததே). தை அமாவாசையன்று மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம். மாகமாசத்தில் வரும் (குரு அஸ்தமன காலத்தில்,) திங்கள் கிழமையும்,(ஞாயிறானால் அர்த்தோதயம்) ச்ரவணநட்சத்திரமும், வ்யதீபாதயோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில் ஏற்படுவதாகும். இந்நாள் கிடைத்தற்கறியதாகும்.
இதுவே சூர்யோதய காலத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும், அமாவாசையின் முதல்பாகமும், ச்ரவணத்தின் நடுப்பாகமும் ஒரு சேரக் கிடைப்பது ரொம்ப விசேஷமாகும். அன்று சூர்யோதயத்திற்கு முன்பாக சமுத்ரம், நதிகள், ஆறு, குளம் அல்லது கிணற்றிலோ குளித்து, பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம், தர்ப்பணம், யாகங்கள் போன்றவை செய்வது அளப்பறிய பலனை தரும்.
பித்ரு பூஜனமாக அத்தேவதை களுக்கு ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும். இந்த மாதிரியான நாள் அமைவது நூறு சூரிய கிரகண தினத்துக்கு ஒப்பானது.
அதனால, வரும் திங்களன்று வரும் அமாவாசை தினத்தை நீத்தார் கடன், அன்னதானம், மாதிரியானவைகளை செஞ்சு பலன் பெறுங்க.