குடும்பத்தில் நிம்மதியாக இருக்கணும்னா 2 விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு இல்லறம், அடுத்து கடன் இல்லாமை. இதுல 2வதாக வரும் பிரச்சனை மன நிம்மதியை சீர்குலைத்து விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.
ஏழைகளுக்குத் தான் கடன் சுமை எல்லாம் என்று நினைத்தால் அது தவறு. பணக்காரர்களும் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க தொழிலில் முதலீடு போடுவார்கள். அப்போது அவர்களும் தொழிலில் நஷ்டம் ஏற்படும்போது கடன் வாங்க முடியாமல் சிரமப்படுவர். வீடு கட்ட, கல்யாணம் கட்ட கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் சிரமப்படுபவர்களைப் பார்த்திருப்போம். வட்டி மட்டும்தான் கட்ட முடியுது. அசல் எங்கே அடையுது என அங்கலாய்ப்பர்.
அதே போல மனைவியின் நகைகளை எல்லாம் முதலீடாகப் போட்டு தொழில் செய்து அதில் தோல்வி அடைந்தவர்களும் உண்டு. அவர்கள் எல்லாம் வாழ்க்கையே விரக்தியாகி மனநிலை பாதிப்புக்குள்ளாவர். சிலர் கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல் அவர்கள் தற்கொலைக்கே போய்விடுகின்றனர்.
சிலர் மானம் போய்விடும் என்று குடும்பத்தோடும் தற்கொலை செய்வதை நாம் நாளிதழ்களில் படித்து இருப்போம். இப்படி தலையாய பிரச்சனையாக கடன் விளங்குகிறது. இதிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்கு என்ன செய்வதுன்னு பார்ப்போம்.இதில் இருந்து மீள்வதற்கு ஆன்மிகத்தில் ஏதேனும் வழி இருக்கான்னு கேட்குறவங்களுக்குத் தான் இந்தப் பதிவு. வாங்க பார்க்கலாம்.
வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு அரிசி தானம் செய்யுங்கள். மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். விஷ்ணுவை வழிபடுங்கள். கோவிலில் மஞ்சள் துணி சாற்றுங்கள். வீட்டில் குபேர விளக்கு ஏற்றுங்கள். இந்த பரிகாரம் செய்தால் என்னென்ன பலன்கள் வரும்னு தானே கேட்குறீங்க. கடன்களைக் குறைக்க, வருமானத்தை அதிகரிக்க, வீட்டில் செல்வம் பெருக, மன அமைதி கிடைக்க இந்த வழிபாட்டை செய்யலாம்.