அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!

By Sankar Velu

Published:

மகாலெட்சுமியின் வழிபாட்டை தீபாவளி அன்று மாலை நாம் செய்யலாம். குபேரனையும் நினைத்து வழிபட வேண்டும். குபேரன் திசைக்குரிய கடவுள். அவருக்கு செல்வ நலன்களை ஆள வேண்டும் எண்ணம் ஏற்பட்ட போது சிவபெருமான் அவருக்கு ஒரு வரம் தருகிறார். நீ மகாலெட்சுமியை வழிபட்டு செல்வநலன்களைப் பெற்றுக்கொள் என்கிறார். அவர் தான் இவரை திசைக்கடவுளாகவும் ஆக்குகிறார்.

அதனால் சிவபெருமானின் வழிகாட்டுதல்படி மகாலெட்சுமியை வணங்கி குபேரன் இந்த வரத்தைப் பெறுகிறார். அதாவது மகாலெட்சுமி இந்த செல்வ நலன்களை இன்னாரிடம் கொண்டு போய் கொடு என்று குபேரனிடம் தான் கொடுக்கிறார். குபேரனும் கொடுக்க வேண்டியவரிடம் கொண்டு அந்த செல்வத்தை சேர்க்கிறார். அப்படிப்பட்ட அற்புதமான வரத்தை குபேரன் பெற்ற நாள் இந்த நாள்.

வரும் 12.11.2023 அன்று லட்சுமி குபேர பூஜை வருகிறது. அதாவது அன்று ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப்பண்டிகை. அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்தப் பூஜையை செய்து வழிபடலாம்.

Kubera yenthiram
Kubera yenthiram

மகாலெட்சுமி, குபேரனின் திருவுருவப்படம், குபேர எந்திரம் இதே போல நீங்கள் ஒரு மனைப்பலகையில் போட்டுக்கொள்ளலாம். நெய்விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள். தாமரை மலர் அர்ச்சனை, குங்குமம், கலசம் வாசனைத்திரவியங்களுடன் நீர் நிரப்பி மாவிலை தோரணம், நூலுடன் கட்டி வைத்துக் கொள்ளலாம். அவல் சர்க்கரை, பாயாசம் அல்லது இனிப்புப் பொருள்களை பூஜைக்கு வைத்துக்கொள்ளலாம்.

இவற்றில் என்ன இருக்கோ அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு முன்னர் விளக்கேற்றி விட்டு உங்களது முதல் வழிபாடு பிள்ளையார். அதற்குப்பிறகு குல தெய்வம், இஷ்ட தெய்வ வழிபாடு.

அதற்குப் பிறகு மகாலெட்சுமி ஸ்தோத்திரம் அதாவது கனகதாரா ஸ்தோத்திரம், மகாலெட்சுமி மந்திரம் என ஏதாவது ஒன்றை சொல்லி அர்ச்சனை பண்ணலாம். 108 போற்றி சொல்லி குங்கும அர்ச்சனை பண்ணலாம். அட்சதையாலும் அர்ச்சனை பண்ணலாம். 54 குங்குமத்திலும், 54 அட்சதையிலும் பண்ணலாம்.

ஓம் குபேராய நமக, ஓம் கணபதியாய நமக என்ற நாமத்தைச் சொல்லி 108 தடவை சொல்லலாம். இதற்கு 108 நாணயங்களையும் வைத்துக் கொள்ளலாம். தாமரை மலர் இதழ், காசு, கொஞ்சம் குங்குமம் வைத்து குபேரனுக்கு அர்ச்சனை பண்ணலாம்.

Lotus
Lotus

தீபாராதனை காட்டி விட்டு மகாலெட்சுமி தாயாரிடம் வறுமையைப் போக்கி என்றென்றும் என் இல்லத்தில் தங்கி எங்களுக்கு அருள்புரிய வேண்டும். குபேரன் நவநிதியையும் எங்களுக்கு வந்து சேர்க்க வேண்டும் என்று வழிபடுங்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம். உழைப்பவர்களுக்கு மட்டும் தான் மகாலெட்சுமி செல்வ நலன்களைத் தருவாள்.