வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!

கிராமங்களில் சிறுவர்கள் ஆற்றில் போய் களிமண் எடுத்து அழகழகா சின்னதா பிள்ளையார் சிலை செய்து ஊர்வலமாக தெருவிற்குக் கொண்டு வந்து காணிக்கை வசூல் செய்வார்கள். அந்த இனிய அனுபவத்தை ஒரு காலத்தில் 80ஸ் குட்டீஸ் எல்லாம் அனுபவிச்சிருப்பாங்க.

இப்பவும் அப்படி முடிந்தால் செய்யுங்க. இல்லாவிட்டால் மஞ்சள் கொண்டும் எளிமையான முறையில் பிள்ளையார் செய்யலாம்.

நம் கையாலேயே பிள்ளையார் செய்யும்போது சந்தோஷம் வரும். மஞ்சளைக் கொண்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பொதுவா நாமே நம் கையால் பிள்ளையார் செய்து பூஜை பண்ணும்போது பெரிய ஆத்ம திருப்தி கிடைக்கும். இப்போது களிமண் கிடைக்காது என்றால் மறு;சளைக் கொண்டு செய்யலாம். என்ன ரெடியா…?

பிள்ளையார் எத்தனை வேண்டுமானாலும் செய்து வைக்கலாம்.

தேவையான பொருள்கள்

 

manjal milk
manjal milk

கோதுமை மர்வு – 1 கப்

மஞ்சள் – முக்கால் கப்

பால் – முக்கால் கப்

ஒயிட் சுகர் (பொடியாக்கியது) – 2 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு குவளை

மிளகு – சிறிதளவு

குங்குமம்

குச்சி – 1

நூல் – தேவைக்கு

எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒண்ணா சேர்த்து பிசைஞ்சி 10 நிமிஷம் ஊற வைங்க. ஒரு பலகைல கோலம் போட்டு விட்டு ஒரு தட்டை எடுத்து அதன் மேல் வைங்க. முதல்ல பிள்ளையார் இருப்பதற்கான ஒரு ஆசனம் செய்ய வேண்டும். கொஞ்சம் மஞ்சள் உருண்டையை எடுத்து பிடித்து அதை தட்டையாக்கி ஆசனமாக செய்யுங்க.

அப்புறம் ஒரு உருண்டையை எடுத்து அதை நீளமாக உருட்டி வளைத்து கால் போல் செய்யுங்கள். ஒரு கால் மேல இன்னொரு கால போட்டு உட்கார்ந்துருக்குற மாதிரியும் பண்ணலாம். நமது வசதிக்கேற்ப பண்ணலாம். அடுத்து பிள்ளையாருக்கு ரொம்ப முக்கியமானது வயிறு. பெரிய உருண்டையா எடுத்து வயிறு போல செய்து அதை கால்களுக்கு நடுவில் வைங்க.

pillaiyar4
pillaiyar4

அப்புறம் அதை விட சிறிய உருண்டையாக பிடித்து அதை தலையாகச் செய்யுங்கள். ஒரு கையை சின்ன உருண்டையாக செய்து அதை விரித்து வைப்பது போல வலது கையாக்கி ஒட்டி விடுங்கள். அதன் பிறகு அதே போல் இன்னொரு கையை செய்து இடது கையை படத்தில் காட்டியது போல் செய்து ஒட்டி விடுங்கள்.

பின்னர் துதிக்கையை படத்தில் உள்ளது போல் செய்து அதை ஒட்டி விடுங்கள். அதன்பிறகு இடுப்பில் ஒரு அரைஞான் கயிறு செய்து போடுங்கள். அதன்பிறகு முப்புரிநூல் தோளில் வலமிடமாக படத்தில் காட்டியது போல போடுங்க.

முக்கியமா நாம செய்ய வேண்டியது பிள்ளையார் காது. அவரோட காது முறம் மாதிரி இருக்கும். அதனால அவரோட பேரு கஜகர்ணன். சூர்ப்பகர்ணன். சூர்ப்பம் என்றால் முறம். அதனால படத்தில் உள்ளது போல இருபுறமும் காது செய்து வைங்க.

pillaiyar5
pillaiyar3

தலைக்கு சின்னதா ஒரு உருண்டை பண்ணி தலையில் கிரீடம் போல அழகா செய்து வைங்க. இப்போ பிள்ளையாருக்கு கண் வைக்க வேண்டும். அதற்கு தண்ணீர் தொட்டு கண் உள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்த வெண்டும்.

அதன் நடுவில் மிளகு வைத்து விட வேண்டும். பிள்ளையாருக்கு தந்தத்தில் ஒன்று உடைந்து இருக்கும். ஏன்னா மகாபாரதம் எழுதும்போது ஒரு தந்தத்தை உடைத்துத் தான் எழுதுவார்.

அதே போல கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்யும்போதும் தந்தத்தை உடைத்துத் தான் செய்வார். அதனால் தந்தம் ஒன்று உடைந்தது போல செய்யுங்க. இன்னொன்று முழு தந்தமாக செய்யுங்க. கடைசியாக துதிக்கையில் ஒரு குச்சியை எடுத்து வரி வரியாக போடுங்க.

பிள்ளையாருக்கு விபூதி பட்டை போட்டு நடுவில் குங்குமப் பொடு;டு வைங்க. அதன் அருகில் படையலாக லட்டு வைங்க. அடுத்து அதன் வாகனம் மூஷிகம் (எலி) செய்து வைங்க. அதற்கு அருகம்புல் எடுத்து அதன் அருகிலேயே வைங்க. இதே போல நீங்களும் அழகா சின்னதா ஒரு பிள்ளையாரை செய்து வைங்க. 3 நாள் கழித்து வீட்டிலேயே விஜர்சனமும் செய்து கொள்ளலாம்.