சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

நமது தேவைகள், வயது, வேலை, உடல் வலிமையைப் பொருத்து விரதத்தை அமைத்துக் கொள்ளலாம். இளவயது கல்யாணம் ஆகணும், நல்ல மணவாழ்க்கை கிடைக்கணும்னு நினைத்தால் பட்டினியோடு விரதம் இருக்கலாம். அல்லது முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக் கொள்ளலாம். குழந்தைக்காக காத்திருப்பவர்களும் இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளலாம். இன்று (18.11.2024) திங்கள் கிழமை தான் முதல் சோமவாரம்.

காலை எழுந்ததும் குளித்துவிட்டு சிவபெருமானின் திருவுருவப்படம் அல்லது முருகப்பெருமானின் திருவுருவப்படம், லிங்கம் எடுத்துக் கொண்டு வில்வத்தால் அர்ச்சனை பண்ணலாம். கோடி மலர்களால் இறைவனை அர்ச்சித்த பலன் இதற்கு உண்டு. முருகனுக்கும், சிவனுக்குமே வில்வத்தால் அர்ச்சனை பண்ணலாம்.

பாராயணம்

அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். சற்கோண தீபம் ஏற்றுவது மிக மிக விசேஷம். நைவேத்தியமாக 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு எளிமையாக வைக்கலாம். அல்லது கல்கண்டு, தேன் கலந்த காய்ச்சிய பால், ஆப்பிள், முந்திரி என ஏதோ ஒரு பொருள் நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். சிவபுராணத்தைப் பாராயணம் பண்ணலாம். இது மன அமைதி கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணலாம்.

இருமுறை பூஜை

சுவாமியிடம் இந் த விஷயத்துக்காக நான் பிரார்த்தனை பண்ணுகிறேன் என மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். காலை, மாலை என இருமுறையும் இப்படி பூஜை செய்து வழிபட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். சிலர் சாதம், சாம்பார், வடை பாயாசம் வைத்து இலை போட்டு இந்த விரதத்தை நிறைவேற்றுவாங்க.

sankabishegam
sankabishegam

சிலர் டிபன் சாப்பிடுறதுன்னு வழக்கம் வச்சிருப்பாங்க. டிபன் சாப்பிடப் போறீங்கன்னா சுவாமிக்கு 2 பழம், வெத்தலைப்பாக்கு நைவேத்தியம் வச்சிக்கோங்க. சாதம் படையல் போடப் போறீங்கன்னா அதையே நைவேத்தியமாக எடுத்து, பிரசாதமாகக் கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

இது முதல் வார திங்கள்கிழமை செய்ய வேண்டியது. இதைப் போல 5 வாரங்களும் செய்ய வேண்டும். இந்த நாளில் கண்டிப்பாக அன்னதானம் செய்து கொண்டு விரதம் இருந்தால் தான் கண்டிப்பாக பலன் கிடைக்கும். உங்களது வசதிக்குத் தகுந்தாற்போல அன்னதானம் செய்யலாம். பெண்களுக்கு இப்படி சில சந்தேகங்கள் வருவதுண்டு.

பெண்கள் சந்தேகங்கள்

இடையில் மாதவிலக்கு வந்தால் என்ன செய்வது? அவர்கள் பூஜை அறைக்குப் போகாமல் விரதத்தைத் தொடரலாம். கணவர் இல்லாதவர்கள் என்ன செய்வது? பெண்கள் எப்போதுமே குடும்பம், பிள்ளைகள், பேரன்மார்கள் நல்லா இருக்கணும்னு நினைச்சா கடவுளிடம் வேண்டுவதில் எந்தத் தவறும் இல்லை.

குழந்தைகள் கூட ஆரோக்கியத்தைப் பொருத்து விரதம் எடுக்கலாம். 4 சோமவாரமும் இருக்க முடியாதவர்கள் கடைசி சோமவார விரதமாவது இருந்து பாருங்க. அது நிச்சயமாக நல்ல பலனைப் பெற்றுத் தரும். தினமும் இந்த மாதம் முழுவதும் நிலைவாசலுக்கு வெளிப்புறத்தில் 2 அகல்விளக்கு ஏற்றி விடுங்கள்.

சங்காபிஷேகம்

சாதாரணமான நல்லெண்ணை, பஞ்சு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த மாதத்திற்கே விளக்கிடும் மாதம் என்று தான் பெயர். இந்த மாதத்தில் வீட்டு நிலைவாசலின் வெளியே இருபுறமும் மாதம் முழுவதும் விளக்கேற்ற வேண்டும்.

சோமவாரத்தில் நடைபெறும் சங்காபிஷேகம் மிக மிக சிறப்பானது. வீட்டில் லிங்கம் வைத்துள்ளவர்கள் சங்கில் தீர்த்தம் வைத்து மலர்கள் இட்டு சங்கால் அபிஷேகம் செய்வது மிக மிக சிறப்பு.

agalvilaku
agalvilaku

அகல் விளக்கு

அது விசேஷமான பலன்களைத் தரும். கோவில்களுக்கு முடிந்த அளவு அகல் விளக்கு வாங்கிக் கொடுங்கள். இப்படி தான தர்மங்கள் செய்யும்போது மேலும் வேண்டுதலுக்கு பலன் சேர்க்கும். மௌன விரதம் இருப்பது அதிவிசேஷமானது.

சோம வார விரதம்

திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமான் பாண்டிய மன்னர்கள், சேர சோழ மன்னர்களுக்கு பிரச்சனை வந்தாலும் சிவன் இருக்க சொன்னது இந்த கார்த்திகை மாத சோம வார விரதம் தான். அப்படின்னா எவ்வளவு சிறப்பு வாய்ந்ததுன்னு பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.