நாளை காலையில் (அக்.30, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று எழுந்து குளித்ததும் பக்கத்தில் உள்ள முருகர் கோவில் சென்று காப்பு கட்டிவிட்டு வரலாம். போக முடியாதவர்கள் கலசம் வைத்தும் இருக்கலாம்.
கலசம் வைக்காமலும் இருக்கலாம். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். இன்று விடுமுறை நாளாக இருப்பதால் அனைவருமே விரதம் இருக்கலாம்.
இன்று தண்ணீரைத் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. முழு உபவாசம் இருப்பவர்கள் கூட தண்ணீர் எடுத்துக் கொள்வது அவசியம்.
சற்கோண கோலம் போட்டு 6 தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். நினைத்ததை நினைத்தபடி முருகப்பெருமான் அருள்புரிவதற்காக இந்த தீபம் ஏற்றுவர். 6 வகையான சாதம். சர்க்கரைப்பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், புதினா சாதம், தேங்காய் சாதம். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக செய்யலாம்.
ஒரு சிலர் சூரசம்ஹாரம் முடித்ததும் விரதத்தை முடிப்பர். அவர்கள் இலை போட்டு சாதம், கூட்டு எல்லாம் செய்து வைத்து வழிபாடு செய்தும் விரதத்தை முடிக்கலாம்.
ஆனால் 6 நாள் விரதம் இருந்தவர்கள் 7வது நாளில் தான் முறையாக விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரனின் தலை விழுந்ததும் விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக குளிக்க வேண்டும்.
மாலையில் இதுபோன்று 6 நெய்விளக்கு ஏற்ற வேண்டும். தொடர்விரதம் இருப்பவர்கள் நல்லா காய்ச்சிய பாலை சுவாமி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விரதம் இருப்பவர்கள் அன்று 1 டம்ளர் பாலை முழுவதும் எடுத்துக் கொண்டு விரதத்தைத் தொடங்கலாம்.
முருகனுக்கும் வில்வ அர்ச்சனை செய்யலாம். எலுமிச்சம்பழ மாலை போடலாம். ஒருநாள் விரதம் இருப்பவர்கள் இன்று மட்டும் மௌனவிரதம் இருப்பார்கள். இது ரொம்பவே சிறப்பானது.
கோவில்ல கொடுக்குற பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு தான் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். அப்படி கோவிலுக்குப் போக முடியாதவர்கள் வீட்டில் சுவாமிக்கு நைவேத்தியமாக வைப்பதை பூஜை முடிந்ததும் சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
சூரசம்ஹாரம் முடித்ததும் அன்னதானம் செய்வது சிறப்பானது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் திருப்புகழைக் கண்டிப்பாகப் படிங்க.