செல்வத்திற்கு மகாலட்சுமி அதிபதியாய் இருந்தாலும் மகாலட்சுமியின் அன்புக்கு பாத்திரமான குபேரனே மகாலட்சுமியின் செல்வம் அனைத்துக்குமான பாதுகாவலன்,. எனவே செல்வம் சேர மகாலட்சுமியின் அருள் மட்டுமல்ல! குபேரனின் அருளும் வேண்டும். குபேரனின் அருளினை பெற கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லவேண்டும்,
ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
இம்மந்திரத்தினை தினமும் மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணி வரை ஜெபித்தால் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் அருள் கிட்டும். ஏனென்றால் மாலை 5 முதல் 7 வரையிலான நேரமே குபேர பகவானின் ஆதிக்க நிறைந்த நேரமாகும். இந்த மந்திரத்தை மாலையில் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் பண பிரச்சினைகளிலிருந்து நீங்கி நிம்மதி பெறலாம். இதே மந்திரத்தை பனை ஓலையில் எழுதி அதிகாலை வேளையில் 108 முறை உச்சரித்து வந்தால், உங்கள் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.