நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குகிறோம். கைகளைக் குவித்து இருகரம் கூப்பி வணங்குவதிலும் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். இது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரியாது. வணங்குவதில் என்ன பெரிய வித்தியாசம்? ஒரே மாதிரி வணங்க வேண்டியதுதானே என்று குதர்க்கம் பேசுபவர்கள்தான் உண்டு. ஆனால் நமக்கு எந்த ஒரு புரிதலும் இல்லாமல் எல்லா கடவுளையும் ஒரே மாதிரி வணங்கி விடுகிறோம்.
எல்லா பழக்கங்களிலும் ஒரு நியதி உண்டு. அதை நம் முன்னோர்கள் செவ்வனே வகுத்துச் சென்று இருக்கிறார்கள். நமக்கு அதில் சந்தேகம் இருப்பது தொடரக்கூடாது என்பதற்காகத் தான் இங்கு பல பதிவுகளில் நாம் தெளிவுபடுத்தி வருகிறோம். கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன நடக்கு? ஒன்றும் நடக்கவில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவர்களுக்கே அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடந்தன என்பதைச் சொல்லத் தெரியாது.
அதனால்தான் அப்படி பிதற்றுவார்கள். ஒருவேளை கோவிலுக்கு வராமல் இருந்து அந்த நேரத்தில் ஏதாவது ஒரு விபரீதம் நடந்துவிட்டால் ஐயய்யோ கோவிலுக்குப் போகாமல் இருந்தேன். பிரச்சனை வந்துவிட்டது என புலம்புவர். அதையும் நாம் பார்த்திருப்போம். சரி. அது இருக்கட்டும். இப்போது விஷயத்துக்கு வருவோம். எந்தெந்தக் கடவுளை எப்படி வணங்குவது? தாய் தந்தையர், குருவை எப்படி வணங்குவதுன்னு பார்க்கலாமா…
கைகளைக் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி மும்மூர்த்திகளை வணங்க வேண்டும். தலை மேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும். நெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும். வாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும். குவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும். தாய்.தந்தை, குரு,தெய்வம் ஆகியோரை மட்டுமே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



