அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன்…

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன் நோக்கம், பலன்கள் என்னன்னு பார்ப்போமா…

இல்லாதவர்களுக்கும், உணவற்ற ஏழைகளுக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான். எனவே, நாம் வழங்கும் அன்னதானம் அவர்களின் பசியை போக்குவதுடன் நமக்கு ஆசிர்வாதமும், புண்ணியமும் கிடைக்கும்.

மனிதர்களுக்கு எவ்வளவு காசு பணம் இருந்தாலும் எதிலும் முழுமையாக திருப்தியடைய மாட்டார்கள். மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்தவைக்கு ஏங்கும். ஒரு மனிதனுக்கு, போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே… பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

பெரிய அளவில் காசு பணம் போட்டுச் செய்வது மட்டுமல்ல அன்னதானம். தண்ணீர் இல்லாமல் தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுப்பதும் அன்னதானமே. பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் செய்யக்கூடிய அன்னதானம் ஆனது நமக்கு மட்டும் புண்ணியத்தை சேர்ப்பது கிடையாது. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் அது புண்ணியத்தை சேர்க்கும்.

மனிதர்களுக்கு நாம் எப்படி அன்னதானம் செய்கின்றோமோ, அதேபோல வாயில்லா ஜீவன்களுக்கும் அன்னதானம் செய்வது நல்லது. நாம் சாப்பிட்ட பின் மீதம் வைக்கும் ஒரு கைப்பிடி உணவை வாயில்லா ஜீவன்கள் உண்டாலும் அது அன்னதானத்தில் சேரும். வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யக்கூடிய அன்னதானம், விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை காக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பாக, காக்கை குருவிகளுக்கும், பசுக்களுக்கும் உணவளிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். அன்னதானத்துடன் தண்ணீர் முக்கியம்: அன்னதானம் செய்யும்போதும் தண்ணீருடன் செய்தால் மட்டுமே அது முழுமையடையும். காக்கை குருவிகளுக்கு இரை வைக்கும்போதும் தண்ணீர் வைக்க வேண்டும்.

மனிதர்கள் எதையுமே நேரடியாகச் சொன்னால் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆக சொல்லும் போது தான் அவர்களுடைய மனதில் நல்ல விஷயங்கள் ஆழமாகப் பதிகின்றது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கு என்று கூறியுள்ளனர்.

அன்னதானம் செய்வதன் மூலம் முன் ஜென்ம கர்ம வினைகள் மற்றும் இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். இது தானங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுவதால், அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும். அன்னதானம் செய்வதால் தரித்திரம் விலகி, செல்வம் பெருகும். பிறருக்கு உணவளிக்கும் போது ஏற்படும் மனநிறைவு நிலையான மகிழ்ச்சியைத் தரும். அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது. இறைவனின் பரிபூரண அருளும் கிடைக்கப்பெறும். பணக்காரர்கள்தான் அன்னதானம் செய்ய வேண்டும் என்றில்லை. ஏழைகளும் அவர்களால முடிந்த அளவு அன்னதானம் செய்யலாம். செய்யறவங்க எல்லாருமே மகாபிரபுக்கள்தான்.