குடும்பத்தோடு நாம இருக்குற அழகான இடம் என்றால் அது வீடு தான். ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, குடும்பத்தில் பிரச்சனை, உறவினரிம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, மனக்குழப்பம், பணக்கஷ்டம், உடல்நலக்குறைவு, புதுப்புதுப் பிரச்சனைகள் என தொடர்ந்து பல பிரச்சனைகள் நமக்கு வந்து கொண்டே இருக்கும். இவ்வாறான நேரங்களில் வெண்கடுகு பயன்படுத்தி அதைத் தீர்ப்பது எப்படின்னு பார்ப்போம்.
சாதாரணப் பொருள் அல்ல
நம்மைச் சுற்றி இருக்கும் தீய எண்ணங்களை அடித்து விரட்டுவது வெண் கடுகு. பொதுவாக நாம் கடுகை சமையலுக்குப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வெண்கடுகு சாதாரணப் பொருள் அல்ல. அது தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அதனால் தான் வெண்கடுகை தேவகணம் என்றும் சொல்வார்கள். அது காலபைரவரின் அம்சம் பொருந்தியது.
தீயசக்திகள் இருக்க முடியாது
வெண்கடுகு சாதாரணப் பொருள் அல்ல. அது தெய்வாம்சமானது. இது குளிர்நிறைந்த பிரதேசங்களில் விளையும். குளிர்ச்சி தருபவை. இமயமலையைச் சுற்றிலும் காவல்புரிகின்ற தேவகணங்கள் தான் இந்த வெண்கடுகு. அதனால் தான் அங்கு அதிகம் விளைகின்றது. இது காலபைரவரின் அம்சம் பொருந்தியது. அவர் தீயசக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பவர். அது போலத்தான் வெண்கடுகும். அது எல்லோருக்கும் பாதுகாவலர். அதனால் தான் வெண்கடுகு இருக்கின்ற இடத்தில் தீயசக்திகள் இருக்க முடியாது என்பார்கள்.
அமாவாசை, பௌர்ணமியில்
அதனால் தான் இந்த வெண்கடுகு புகையாக மாறும்போது அதில் உள்ள தேவகணங்கள் நமக்கு உள்ள பிரச்சனைகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விடும். அப்போது வீட்டில் தெய்வபலம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி பூஜை செய்யும்போதும், அமாவாசை, பௌர்ணமியில் விளக்கேற்றி பூஜை செய்யும்போதும் சாம்பிராணி தூபம் காட்டுவதை நாம் வழக்கமாகக் கொண்டு இருப்போம். அந்த மாதிரி வேளைகளில் அதனுடன் வெண்கடுகையும் சேர்த்து தூபம் போடலாம்.
தீபமாக ஏற்ற வேண்டும்
மேலும் தொழிலில் போட்டி, மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவதால் பிரச்சனைகள் ஏற்படும். இவற்றில் இருந்து நாம் பாதிக்கப்படாமல் இருக்க வெண்கடுகை சிவப்புத்துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதை அகல்விளக்கில் நல்லெண்ணை ஊற்றித் தீபமாக ஏற்ற வேண்டும். அப்போது அதில் உள்ள வெண்கடுகு நன்றாகப் பொரியும்.
அப்போது அந்த வெண்கடுகு பொரிவது போல கண் திருஷ்டி, நம் மீது மற்றவர்கள் வைத்துள்ள பொறாமை எல்லாம் பொரிந்து போகும். அதுபோல வாரம் ஒருமுறை சாம்பிராணி போடும்போது வெண்கடுகைத் தூவி விடுங்கள். இதனால் தொழில் செய்யும் இடத்திலும் வியாபாரம் செழிக்கும். அந்த இடத்திலும் மணம் பரவி மன அமைதி உண்டாகும்.
எதிர்மறை எண்ணங்கள்
இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம்மைச் சுற்றி எப்போதும் நல்லதே நடக்கும். எனவே காலபைரவர் அம்சமான இந்த வெண்கடுகைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்க முடியும்.