கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!

By Staff

Published:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாய் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அட்சயம் என்றால் வளர்வது என பொருள். இன்றைய தினம் செய்யப்படும் அனைத்தும் இருமடங்காய் வளரும் என்பது நம்பிக்கை. அதனால், கடந்த சில வருடங்களாய் தங்கம் வாங்குவதில் மக்கள் குறிப்பாக பெண்கள் இறங்கியுள்ளனர். ஆனால், இந்நாளில் இறைவழிபாடு, தானம்,, குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் மாதிரியான நற்காரியங்களுக்குதான் அந்த காலத்தில் செய்யப்பட்டது. அந்த நோக்கம் மாறி வெறும் பொருளை குவிப்பது மட்டுமே நோக்கமாகிவிட்டது.

கடந்த சில வருடங்களில் அட்சய திருதியைக்கான முன்பதிவு சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கும். அட்சயதிருதியை அன்று மக்கள் வெள்ளம் நகைக்கடையில் அதிகமாக காணலாம். செய்கூலி, சேதாரம் தள்ளுபடி முதற்கொண்டு, பரிசுப்பொருட்கள் வரை பல்வேறு சலுகைகளை தங்க நகை கடைகள் அறிவிக்கும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, காய்கறிகள், மருந்து கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை அட்சய திருதியை தினம்(26/4/2020) அன்று வழக்கம்போல தங்கம் வாங்க முடியாதோ என கலங்கியவர்களுக்கு உதவும் விதமாக ஆன்லைன் புக்கிங் என கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தங்களுக்கு தேவையான நகைகளை புக் செய்தால் ஊரடங்கு சட்டம் முடிந்தபிறகு வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் அட்சய திருதியை அன்று தங்கம்தான் வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. அதிகாலையில் குளித்து முடித்து உப்பை வாங்குவதும் அதை தானம் செய்வதும் நல்லது. உப்பில் மகாலட்சுமி இருப்பது நமக்கு தெரியும். அதனால் எப்போதும் வீட்டில் உப்பு இருப்பது அவசியம். அதேநேரம் நாம் உப்பினை செய்வது வழக்கமில்லை. அதனால் உப்பிட்ட உணவுகளை தானம் செய்யலாம். உப்போடு மஞ்சளும் வாங்குவது சிறந்த பலனை தரும்.

Leave a Comment