நவராத்திரியின் முக்கிய திருநாளாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் திங்கட்கிழமை 7ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வணங்குவதோடு மட்டுமல்லாமல். நமக்கு பலன் தரும் ஆயுதங்களை பூஜையில் வைத்து வணங்குவர்.
அதற்கு பொட்டிட்டு பூஜையறையில் வைத்து வணங்குவர். மேலும் நாம் உபயோகிக்கும் கதவு, நிலை, ஜன்னல்கள், ஸ்டவ் அடுப்பு கார், பைக் என அனைத்துக்குமே பூ இட்டு பொட்டு இட்டு வணங்குவது அதன் மேல் நாம் வைத்துள்ள மரியாதையை குறிக்கிறது.
நமக்கு உபயோகமாக இருக்கும் பொருட்கள் அனைத்துமே தெய்வ வடிவானவை என்ற அடிப்படையிலேயே அனைத்து பொருட்களும் இவ்வாறு வணங்கப்படுகிறது.
ஆட்டோக்காரர்கள், டூவீலர் போர் வீலர் மெக்கானிக்குகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் அனைத்திலுமே புத்தகங்கள், வியாபாரிகளின் அக்கவுண்ட் புத்தகங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் சரஸ்வதி தேவி உட்பட தெய்வ புகைப்படத்தை வைத்து மாலையிட்டு வணங்குவதுதான் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை சிறப்பாகும்.