விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வார இறுதியோடு முடியவுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், சாண்டி, லோஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளனர்.
நேற்று காலை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆலுமா டோலுமா என்ற பாடலோடு புலர்ந்தது.
பின்னர், விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.
முகின், தர்ஷன் வெளியேறும் போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார், அவன் நிச்சயம் வென்றுவிடுவான் என்று இருக்கையில் இப்படி நடந்தது வருத்தமாக உள்ளது. அவனை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும்” என்றார்..
மேலும் இங்கு அனைவரும் சிரித்துக் கொண்டு இருக்க காரணமே சாண்டிதான். ஒளிபரப்பான வீடியோக்களை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் இங்கு எப்படிப்பட்ட அன்பு இருந்துள்ளது என்று எனக் கூறினார்.