தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் கோவில் தசரா விழாவுக்கு புகழ்பெற்றது. இப்பகுதியில் உள்ள சின்ன சின்ன வியாபாரிகளில் இருந்து, ஆட்டோ டிரைவர், சரக்கு வாகன டிரைவர்கள் உட்பட பலரும் தங்களது குலசை முத்தாரம்மன் பெயரையே தங்களது வாகனங்களுக்கு பெயராக சூட்டுகின்றனர்.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் பல வித்தியாசமான வேடமிட்டு பல ஊர்களில் யாசகம் செய்து அதை முத்தாரம்மன் கோவிலில் செலுத்துவர்.
இங்கு பலரின் நம்பிக்கையை காப்பவளாக முத்தாரம்மன் இருக்கிறார்.
இந்த வருடமும் இக்கோவிலில் விழா தொடங்கியுள்ளது. பக்தர்கள் பலர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற இக்கோவிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
பலரின் கோரிக்கையை இந்த அம்மன் உறுதியாக நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது. அதனால் இங்கு கூட்டம் வந்து குவிகின்றது. தமிழ்நாட்டில் தசரா விழா மிக சிறப்பாக நடைபெறும் ஊர் இது மட்டுமே.
இந்த ஊரில் விஜயதசமியன்று குலசை கடற்கரையில் அசுரனை வதம் செய்யும் விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல லட்சம் மக்கள் கலந்துகொள்வதும், வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இங்கு கலந்து கொள்வது விசேஷமாகும்.