நேற்று காலை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆலுமா டோலுமா என்ற பாடலோடு புலர்ந்தது. வெளியே இருந்துவந்த டான்ஸ் கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வார இறுதியோடு முடியவுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், சாண்டி, லோஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எங்கேயோ கேட்ட குரல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஆடியோ கிளிப்பில் வரும் நிகழ்வு என்ன என்பதையும், அது எங்கு நடைபெற்றது என்றும், அதில் பங்குபெற்றவர்கள் யார் என்பதையும் காகிதத்தில் எழுத வேண்டும் என்று கூறப்பட்டது.
அதில் பல முக்கியமான ஆடியோக்கள் போட்டு காட்டப்பட்டது, இதில், ஷெரின் 5 மதிப்பெண்கள் பெற்று வெற்றி முதல் இடத்தையும், சாண்டி 4 மதிப்பெண்கள் பெற்று வெற்றி 2வது இடத்தையும், லாஸ்லியா 3 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும், முகின் 2 மதிப்பெண்கள் பெற்று வெற்றி 4 வது இடத்தையும் பிடித்தனர்.