இன்று தைப்பூசம்: வடலூர் மற்றும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர் வெள்ளம்

இன்று தைப்பூசத்தை திருநாளையொட்டி வடலூர் வள்ளலார் கோவிலிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் அதிகாலையிலேயே வெள்ளம் போல் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய…


d7260c0ca6bc0e11e1c80bb286c8775e-1

இன்று தைப்பூசத்தை திருநாளையொட்டி வடலூர் வள்ளலார் கோவிலிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் அதிகாலையிலேயே வெள்ளம் போல் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஜோதியை பார்க்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.

உருவ வழிபாடின்றி இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைத்த வள்ளலார் நினைவாக இங்கு ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோதியை பார்க்க அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள் ஜோதி தரிசனம் கிடைத்ததும் ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதியை தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன