தர்பார் தோல்வியால் ரஜினி எடுத்த அதிரடி முடிவு?

By Staff

Published:


4866e516447e7f561a04c7d2a71f4db9

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் அதிகப்படியான வசூலை கொடுத்தாலும் அந்த படம் வெளிவந்த பின்னர் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. காரணம் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதும் அதில் ரஜினி சம்பளம் பெரும்பகுதி இருப்பதும் என்று கூறப்படுகிறது
ரஜினி நடித்த முந்தைய திரைபப்டமான தர்பார் திரைப்படம் ரூபாய் 250 கோடிக்கும் மேல் வசூல் ஆன போதிலும் அந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றும் ஒரு சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை அதிரடியாக குறைக்க முன்வந்துள்ளார். ’தலைவர் 168’ படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூபாய் 118 கோடி ரூபாய் ரஜினிக்கு சம்பளம் கொடுக்க பேசிய நிலையில் தற்போது பாதியாக குறைத்து கொண்டதாகவும், இந்த படத்தில் அவருக்கு சம்பளம் ரூபாய் 58 கோடி மட்டுமே என்றும் கூறப்படுகிறது

Leave a Comment