இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!

நம்ம வீட்டுல தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகளை நாம சந்திச்சிருப்போம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பிள்ளைகள் வழியில் தான் பிரச்சனைகள் வரும். அதுமட்டும் அல்லாமல் பக்கத்து…

நம்ம வீட்டுல தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகளை நாம சந்திச்சிருப்போம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பிள்ளைகள் வழியில் தான் பிரச்சனைகள் வரும். அதுமட்டும் அல்லாமல் பக்கத்து வீட்டார், உறவினர் வழியிலும் பிரச்சனை வரும். நண்பர்களிடையேயும் வருவதுண்டு. அலுவலகத்தில் பிரச்சனை. எல்லாத்துக்கும் காரணம் வாஸ்து சரியில்லன்னு சொல்வாங்க. வீட்டுல வாஸ்து சரியில்லன்னா இருக்கவே இருக்கு பிள்ளையார். அதை எப்படி மாட்டணும்? வாங்க பார்க்கலாம்.

நம் வீட்டில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் மாற்றக்கூடிய ஒரே தெய்வம் பிள்ளையார் தான் என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி. வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பாருங்க.

எப்பவுமே நான் சொல்றது என்னன்னா நாம வீட்டுக்குள்ள நுழையும்போதே எதிரில ஒரு பிள்ளையாரை வச்சிடணும். சின்னப்பிள்ளையா பேசும்போது எவ்வளவு அவமானங்களையோ சந்திச்சிருக்கேன். தங்குவதற்கு அறை தர மாட்டாங்க. சாப்பிட்டீங்களான்னு கேட்க மாட்டாங்க.

இந்தப் பிள்ளையா பேசப்போகுதுன்னு ஏளனமா பார்ப்பாங்க. சமயசொற்பொழிவு என்ற துறையில் இளம் வயதில் கலைமாமணி பட்டத்தை வாங்கியது உண்மையிலேயே சந்தோஷம். நான் இந்தத் துறைக்கு அறிமுகமானது 6 வயசு. என்னுடைய குருநாதரோடு 3 ஆண்டுகள் பயணம் செய்தேன்.

9 வயதிலிருந்து தனியாக சொற்பொழிவு பண்ணினேன். 26வது வயதில் கலைமாமணி விருது கிடைத்தது. அது உண்மையிலேயே இறைவன் எனக்குக் கிடைத்த பரிசு. அங்கீகாரமாகத்தான் நான் பார்க்கிறேன். எந்தவீட்டு வாஸ்து பிரச்சனையாக இருந்தாலும் வீட்டுக்குள்ள நுழையும்போது எதிரில் பிள்ளையாரை வச்சிடுங்க. அப்படி மாட்டிட்டா வீட்டுல எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அதை அவரு பார்த்துக்குவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.