நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!

கார்த்திகை தீபத்துக்கு முன் தினம் ஏற்ற வேண்டியது பரணி தீபம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம். நசிகேதன் என்பவரிடம் எமதர்மராஜா…

கார்த்திகை தீபத்துக்கு முன் தினம் ஏற்ற வேண்டியது பரணி தீபம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம்.

நசிகேதன் என்பவரிடம் எமதர்மராஜா பல கேள்விகளைக் கேட்கிறார். அவருக்கு பல நியதிகளைச் சொல்லி பூலோகத்திற்கு அனுப்புகிறார். அப்போது நசிகேதன் எமதர்னிடம் இப்படி கேட்கிறார். நீங்க சொல்ற எல்லாத்தையும் மனசுக்குள்ள கொண்டு வந்து மனதர்மமாக அதைக் கடைபிடித்து மனயாகமாகக் கொண்டு வந்து எல்லா மனிதர்களுக்கும் இது சாத்தியமில்லையே.

எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமாக எமவாதனை இன்றி இந்த உலகத்தை அடைவதற்கும், பிறவா பெருநிலை பெறுவதற்கும், அவர்கள் உய்வதற்கும் ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன் என கேட்கிறார் நசிகேதன். அப்போது பல விஷயங்களைச் சொல்லி எமதர்மன் அனுப்புகிறார். அதுல ஒரு விஷயம்தான் இது. எமதர்மனுக்குப் பிரியமான இந்த பரணி தீபத்தில் சிவனை வணங்கி யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அறியாமல் தெரியாமல் செய்கின்ற பாவங்கள் நீக்கப்படும்.

அதுமட்டும் அல்லாமல் அவர்கள் முன்னோர்களுக்கும் நலன் கிடைக்கும். அந்த ஆன்மா இந்த உலகிற்கு வரும்போதும் நலன் கிடைக்கும். அதனுடைய சந்ததியினருக்கும் நலன் கிடைக்கும். அப்படிங்கற விஷயத்தை நசிகேதனிடம் சொல்லி அனுப்புகிறார் எமதர்மன். அத்தகைய சிறப்பு வாய்ந்த பரணி தீபம் வரும் 3.12.2025 அன்று வருகிறது. இது சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை மகாதீபம் திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும்.