அட்சய திருதியை அன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டியவை!

By TM Desk

Published:

அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் தங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற படி என்ன தானம் செய்யலாம், எந்த நிறத்தில் ஆடை அணியலாம், எந்த கடவுளை வணங்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

அஸ்வினி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
செய்ய வேண்டிய தானம்: ஏழை மாணவர்களுக்கு தங்களால் இயன்ற தானம் செய்யலாம். கதம்ப சாதம் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: சாம்பல்.

பரணி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீரங்கநாதர்
செய்ய வேண்டிய தானம்: நோயாளிகளுக்கு இயன்ற உதவி செய்யலாம். நெய் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை

கிருத்திகை நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
செய்ய வேண்டிய தானம்: சர்க்கரை பொங்கல் தானம் செய்யலாம். பார்வையற்ற எளியோருக்கு பண உதவி அல்லது சிகிச்சை உதவி செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: சிவப்பு

ரோகிணி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்
செய்ய வேண்டிய தானம்: பால் அல்லது பால் சம்பந்த உணவை தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை.

மிருகசீரிஷம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை.
செய்ய வேண்டிய தானம்: சாம்பார் சாதம் தானம் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
அணிய வேண்டிய நிறம்: செந்நிறம்.

திருவாதிரை நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பைரவர்.
செய்ய வேண்டிய தானம்: தயிர் சாதம் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: கருப்பு.

புனர்பூசம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்.
செய்ய வேண்டிய தானம்: தயிர் சாதம் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: மஞ்சள்.

பூசம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்.
செய்ய வேண்டிய தானம்: மிளகு கலந்த சாதம் தானம் செய்யலாம். பறவைகளுக்கு, கால்நடைகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: நீலம்.

ஆயில்யம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்
செய்ய வேண்டிய தானம்: வெண்பொங்கல் கொடுக்கலாம். பச்சை பயிறு தானியம், கீரை பசு மாட்டிற்கு கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: பச்சை.

மகம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்.
செய்ய வேண்டிய தானம்: கதம்ப சாதம் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: சாம்பல்.

பூரம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீரங்கநாதர்
செய்ய வேண்டிய தானம்: நெய் சாதம் அல்லது கோவில்களுக்கு பிரசாதம் செய்வதற்கு நெய் வாங்கி தரலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை.

உத்திரம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.
செய்ய வேண்டிய தானம்: சர்க்கரை பொங்கல் பிரசாதமாக கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: சிவப்பு.

அஸ்தம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்.
செய்ய வேண்டிய தானம்: பால் பாயசம் அல்லது கோவில்களுக்கு பால் வாங்கி தரலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை.

சித்திரை நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை.
செய்ய வேண்டிய தானம்: துவரம் பருப்பு கலந்த சாம்பார் தானமாக கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: செந்நிறம்.

ஸ்வாதி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பைரவர்.
செய்ய வேண்டிய தானம்: உளுந்து வடை அல்லது உளுந்து சம்மந்தமான உணவை தானமாக கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: கருப்பு.

விசாகம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்.
செய்ய வேண்டிய தானம்: தயிர் சாதம் தானம் செய்யலாம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: மஞ்சள்.

அனுஷம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்.
செய்ய வேண்டிய தானம்: மிளகு கலந்த சாதம் தானம் செய்யலாம். பறவைகளுக்கு, கால்நடைகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: நீலம்.

கேட்டை நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
செய்ய வேண்டிய தானம்: வெண்பொங்கல் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: பச்சை.

மூலம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்.
செய்ய வேண்டிய தானம்: கதம்ப சாதம் தானம் செய்யலாம். மனநோயளிகளுக்கு உதவலாம்.
அணிய வேண்டிய நிறம்: சாம்பல்.

பூராடம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்:
செய்ய வேண்டிய தானம்: நெய் சாதம் தானம் கொடுக்கலாம். இயலாத தம்பதியர்களுக்கு ஏதேனும் பொருள் உதவி அல்லது உணவு வாங்கி தரலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை.

உத்திராடம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.
செய்ய வேண்டிய தானம்: சர்க்கரை பொங்கல் தானம் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
அணிய வேண்டிய நிறம்: சிவப்பு.

திருவோணம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்.
செய்ய வேண்டிய தானம்: சர்க்கரை பொங்கல் தானம் செய்யலாம். இயலாதோருக்கு ஏதேனும் உங்களால் இயன்ற உதவி செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: வெள்ளை.

அவிட்டம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை.
செய்ய வேண்டிய தானம்: சாம்பார் சாதம் தானம் செய்யலாம். பறவைகளுக்கு, கால்நடைகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: செந்நிறம்.

சதயம் நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பைரவர்.
செய்ய வேண்டிய தானம்: உளுந்து சம்பந்தமான உணவு கொடுக்கலாம்.
அணிய வேண்டிய நிறம்: கருப்பு.

புரட்டாதி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்.
செய்ய வேண்டிய தானம்: தயிர் சாதம் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: மஞ்சள்.

உத்திரட்டாதி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்.
செய்ய வேண்டிய தானம்: மிளகு கலந்த சாதம் தானம் செய்யலாம். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமாக ஏதேனும் உதவி செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: நீலம்.

ரேவதி நட்சத்திரம்

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
செய்ய வேண்டிய தானம்: வெண் பொங்கல் தானம் செய்யலாம்.
அணிய வேண்டிய நிறம்: பச்சை.

Leave a Comment