அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

பொதுவாக நாம் தீபாவளி என்றாலே மகாலட்சுமியைத் தான் வழிபடுவோம். செல்வங்களை அருள்பவள் அவள் தான். அத்தகைய லட்சுமியை 8 வடிவங்களாக அதாவது அஷ்ட லட்சுமியாக நாம் பார்த்திருப்போம். ஆனால் 16 வடிவங்களிலும் காட்சி அளிக்கிறார். அதுபற்றி பார்ப்போமா…

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியை அஷ்டலட்சுமின்னு நாம சொல்கிறோம். அதுல என்னென்ன லட்சுமி இருக்காங்கன்னு பாருங்க. ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த லட்சுமி 16 வடிவங்களுடனும் காணப்படுகிறாள். அவர்கள் யார்? என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா..

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகின்றனர்.

மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள் ஆதிலட்சுமி. திருமகளின் மிகப் பழைமையான தோற்றம் இதுதான். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் சொல்வர். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் 4 கரங்கள் கொண்டு அருளும் அன்னை.

பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை தனலட்சுமி. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் 6 கரங்களைக் கொண்டு அருள்பவள். வேளாண்மை வளம் பெருக்கும் தேவி தானியலட்சுமி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த 8 வகையான கரங்களைக் கொண்டு அருளும் தாயார்.

ashtalakshmi
ashtalakshmi

கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள். இவளே அரசராக்கும் பெருஞ் செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவள் தான் கஜலட்சுமி. இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருள்வாள். குழந்தைப் பேறு அருளும் திருமகள் சந்தான லட்சுமி. இவள் கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த 6 வகையான கரங்களைக் கொண்டு அருள்பவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

வீரம், வலிமை, அருளுவாள். துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார் தான் வீரலட்சுமி. செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய எட்டு வகையான கரங்களைக் கொண்டு அருளக்கூடியவள்.

யுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுபவள் விஜயலட்சுமி. சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என 8 வகையான கரங்களுடன் காட்சி அளிப்பவள். அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள் வித்யாலட்சுமி. வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நால்வகைக் கரங்களுடன் அருளக்கூடியவள்.

வேறு சில வடிவங்களும் உள்ளன. செழிப்பை நல்கும் வளத்திரு ஐசுவரியலட்சுமி, நன்மைகள் யாவும் தரும் சௌபாக்கியலட்சுமி, அரசபோகங்களை அருளும்  ராஜ்யலட்சுமி மற்றும் வரம் தரும் வரலட்சுமி ஆகியோரும் உள்ளனர்.