அமாவாசைல குலதெய்வ வழிபாடு ஏன்? காகத்திற்கு உணவு கொடுத்தா இவ்ளோ விசேஷமா?

அமாவாசை தினத்துக்கு எந்தக் கோவிலுக்குப் போறதுன்னு நிறைய பேருக்கு கேள்வி எழும். குலதெய்வ கோவிலுக்குப் போறது உத்தமம். ஏன்னா அன்னைக்கு போய் வழிபட்டா உங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்னு ஒரு ஐதீகம் இருக்கு. அமாவாசை…

amavasai worship

அமாவாசை தினத்துக்கு எந்தக் கோவிலுக்குப் போறதுன்னு நிறைய பேருக்கு கேள்வி எழும். குலதெய்வ கோவிலுக்குப் போறது உத்தமம். ஏன்னா அன்னைக்கு போய் வழிபட்டா உங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்னு ஒரு ஐதீகம் இருக்கு.

அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு சாபம் நீங்குகிறது. காக்கைக்கு உணவு அளிப்பதால் முன்னோர்களுக்குக் கொடுத்த பலன் கிடைக்கிறது. காகம் சனிபகவானின் வாகனம். அவரது உறவினர் எமன். அதனால் காகத்திற்கு உணவு அளிப்பதால் மூவருக்கும் திருப்தி அளித்த பலன்கள் நமக்குக் கிடைக்கிறது.

அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும்   விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.

அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால், பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு   வரலாம்.

தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் குலதெய்வம் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால்,  எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். பொன் பொருள்   சேர்க்கை உண்டாகும்.

நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும்  நமக்கு கிடைக்கும்.

அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும். அந்த வகையில் வரும் மார்ச் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அமாவாசை வருகிறது.