திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய…

ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம்.

சைவ, வைணவ ஆலங்களில் வழிபடும் நாள் தான் இந்த ஆடிப்பூரம். இங்கே அம்பாள் அவதரித்தது. அங்கே ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது.

அம்பிகைக்கு வளைகாப்பிட்ட வைபவம்னு எல்லா கோவில்களிலும் கொண்டாட்டமாக இருக்கும். கல்யாணம் ஆகக்கூடிய வயதில் இருப்பவர்கள் இந்த ஆடிப்பூரத்துக்காகக் காத்துக் கொண்டு இருப்பார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் இந்த ஆடிப்பூரம் வரப்பிரசாதமான நாள்.

இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். திருமணம், குழந்தை வரம் என கேட்டதை கேட்ட உடனேயே தரக்கூடிய அற்புதமான சக்திவாய்ந்த திருநாள் இதுதான்.

நல்ல சம்பந்தம் வரல. வந்தாலும் தட்டித் தட்டிப் போகுதுன்னு திருமண தடை உள்ளவர்கள் இந்த வழிபாடு பண்ணலாம். அதே போல நிறைய விரதங்கள் இருந்துட்டோம். ரொம்ப வருஷமா குழந்தைக்காகக் காத்திருக்கோம். ஆனாலும் இன்னும் கூடி வரவில்லை.

அப்படிங்கறவங்களும் இந்த வழிபாட்டை செஞ்சிப் பாருங்க. அடுத்த ஆண்டு கண்டிப்பா கையில ஒரு குழந்தை இருக்கும். ரொம்ப அற்புதமான இந்த விரதத்தின் சிறப்பே அம்பாள் தான். இந்த அற்புதமான நாள் ஜூலை 28ம் தேதி இந்த ஆண்டு வருகிறது. ஆடி மாதம் 12ம் நாள் ஆடிப்பூரம். மிஸ் பண்ணிடாதீங்க..!