ஆடி 18 என்றதுமே ஆடிப்பெருக்கு என்று புனிதமான நாளாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அன்றுதான் தாலிச்சரடை மாற்றுவாங்க. வாங்க இந்த நாளின் சிறப்புகள் என்னென்;னன்னு பார்ப்போம்.
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்குன்னு சொல்வாங்க. இது மிக மிக விசேஷமான நாள். அனைவரும் செய்யும் வழிபாடு. பதினென்கீழ்க்கணக்கு, பதினென்மேல்கணக்கு, பாரதத்தின் யுத்தம் நடந்த நாள்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18. சித்தர்கள் 18, கணங்கள் 18. சபரிமலையில் படிகள் 18. புராணங்கள் 18. இப்படி 18 என்ற எண்ணிக்கைக்கு அவ்வளவு சிறப்பு உள்ளது. ஆடி மாதத்தில் 18க்கு என்ன சிறப்பு என்றால் அப்போதுதான் காவேரி மாதா எல்லாரையும் வந்து சேர்ந்து அவர்களுக்கு ஒரு நல்ல உற்சாகத்தைத் தரக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.
ஆகவேதான் இந்த நாளைப் பெரியோர்கள் கணக்கிட்டு காவிரிக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். அப்படின்னா எல்லாரும் இதைக் கொண்டாடணுமா என்றால் காவிரி என்பது குறிப்பிட்ட இந்த நதிக்கு மட்டும் அல்ல. தண்ணீர் அனைத்தும். எங்கெங்கே எந்தெந்த நதிக்கரைகளில் மக்கள் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவருக்குமே அன்றைக்கு அந்தந்த நதியை வழிபடுவதற்குரிய நாளாகத் தான் இது சொல்லபட்டுள்ளது.
ஆக காவிரி இருக்குற நதிக்கரைகளில் மட்டும்தான் கொண்டாடணும்னு கிடையாது. தண்ணீரைப்; பயன்படுத்துகிற அனைவருமே கொண்டாட வேண்டிய நாள்தான் இது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். இத்தகைய அற்புதமான நாளான ஆடிப்பெருக்கு நாளை 3.8.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மிஸ் பண்ணிடாதீங்க.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



