ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம்.

அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை தான். இந்த ஆண்டு 2 ஆடிக் கிருத்திகைகள் வருகின்றன. 20.7.2025 மற்றும் 16.8.2025 ஆகிய தினங்கள்தான். இதுல எந்தக் கிருத்திகையை நாம் கொண்டாடுவது? ஆடிக்கிருத்திகையை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய முருகன் திருத்தலங்களை வைத்து நாம இதைப் பார்க்கலாம்.

திருத்தணி, சென்னை வடபழனி முருகன் கோவில்களில் ஆகஸ்டு 16ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை. பழனியில் ஜூலை 20ம் தேதி ஆடிக்கிருத்திகை. ஒவ்வொரு கோவில்களிலும் அந்தந்த ஆகம முறை, பஞ்சாங்கப்படியே ஆடிக்கிருத்திகை வரும். 100க்கு 90 சத ஆலயங்களில் ஆடிக்கிருத்திகை 2வதாக வருவதைத் தான் எடுப்பார்கள்.

ஆகஸ்டு மாதம் வரும் ஆடிக்கிருத்திகையில் கல்யாணம் ஆகணும், குழந்தை வரம் வேணும் என்பவர்கள் விரதம் இருந்து வழிபடலாம். அநேக கோவில்களில் இந்த நாளில் வழிபடுவதால் இதையே எடுத்துக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தான் சவுகரியம் என்பவர்கள் 20.7.2025ல் எடுத்துக் கொள்ளலாம். அன்று அதிகாலை 12.14மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பித்து இரவு 10.36 மணிக்கு முடிகிறது.

அதே போல ஆகஸ்டு மாதம் 16ம் தேதி அன்று காலை 8.27 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பித்து மறுநாள் காலை 6.48மணிக்கு முடிகிறது. ஆகஸ்டு 16ல் இன்னொரு சிறப்பு என்னன்னா தேய்பிறை அஷ்டமி. கடன் சுமை உள்ளவர்கள் இந்த நாளில் விரதம் இருந்தால் இரட்டிப்புப் பலன் கிடைக்கும். காலபைரவர், முருகப்பெருமான் என இருவரையும் வணங்கி பலன் பெறலாம்.