பொதுவாக பாதாம் அனைவரின் வீடுகளில் அதிகம் காணப்படும் ஊட்டசத்துகள் நிறைந்த பருப்பு வகையாகும். பாதாம்பருப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
பாதாமில் பலவித நன்மைகள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.
பாதாம் மனிதனின் மூளைக்கு ஒரு சிறந்த பொருளாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே பாதம் மலைப்பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. ஆசியாவில் ஈரான் ஈராக் மக்கா சிராஸ் போன்ற இடங்களில் பாதாம் மரங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.
பாதாமை சரியான முறையில் உட்கொண்டால் உங்கள் மூளையின் நியூரான்களை செயல்படுத்துவது மிகவும் எளிதாக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும், இருப்பினும் பாதாமை சரியான முறையில் பாதாமை உட்கொள்வது அவசியம்.
பாதாம் பருப்பை முறையாக உட்கொள்வது பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதனை தோலுடன் உட்கொள்வதால் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது.
அதனால் பாதாமை தோலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பெரும்பாலும் பலர் அவசரம் காரணமாக உலர் பாதாம் பருப்பை அப்படியே உட்கொள்ள தொடங்குகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பித்தத்தின் சமநிலையின்மை உடலில் அதிகரிக்க தொடங்குகிறது.
தீராத வியாதிகளுக்கு மருந்தாகும் மீன்! அது எந்த மீனுங்க….
இதனால் நோய் தொற்றுகள் ஏற்ப்பட நேரிடும். எனவே தோலுடன் பாதாமை உட்கொள்வதை தவிர்க்கவும். தோலுடன் பாதம் சாப்பிடுவதால் அதன் சில துகள்கள் நமது குடலில் சிக்கி கொள்ளும் இதன் காரணமாக வயிற்று வலி எரிச்சல் வாயு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாதாமை தோல் நீக்கி சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.