நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NCPI) விரைவில் UPI லைட் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோ டாப்-அப் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மீண்டும் மீண்டும் UPI லைட்டில் பணத்தை டெபாசிட் செய்யத் தேவையில்லை. தொகை தானாகவே UPI வாலட்டில் டெபாசிட் செய்யப்படும். இந்த புதிய வசதி அக்டோபர் 31ம் தேதி முதல் தொடங்கும்.இது தொடர்பாக என்பிசிஐ சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் தொகையை மீண்டும் தங்கள் UPI லைட் கணக்கில் டெபாசிட் செய்ய ஆட்டோ டாப்-அப் விருப்பத்தைப் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் இந்த வசதியை முடக்கலாம்.
UPI பின் தேவையில்லை
சிறிய கட்டணங்களுக்கு UPI லைட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.500 வரை பணம் செலுத்துவதற்கு UPI பின் தேவையில்லை. இருப்பினும், இந்தத் தொகைக்கு மேல் பணம் செலுத்துவதற்கு UPI பின்னை உள்ளிடுவது அவசியம்.
நிலையான தொகையை முடிவு செய்ய வேண்டும்
இந்த வசதியில், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து UPI லைட் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நிலையான தொகையைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ரூ. 1000 வரம்பை டாப்-அப்பாக நிர்ணயித்திருந்தால், UPI லைட் வாலட்டில் உள்ள இருப்புத் தொகை தீர்ந்தவுடன், ரூ.1000 தானாகவே அதில் சேர்க்கப்படும். UPI மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.
சேர்க்க வேண்டிய அதிகபட்ச தொகை
UPI லைட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.2,000 ஆகும். அதாவது வாடிக்கையாளர்கள் ஒரு நேரத்தில் ரூ.2,000 மட்டுமே ஆட்டோ-டாப் செய்ய முடியும்.
இந்த அறிவுறுத்தல்கள் வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். வங்கிகள் UPI லைட்டில் தானாக டாப்-அப் செய்யும் வசதியை வழங்கும், இது ஆணைகளை உருவாக்க அனுமதிக்கும்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 முறை மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து UPI லைட் கணக்கில் நிலையான தொகையைச் சேர்க்க முடியும். சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆணை வழங்கும் போது சரிபார்க்க வேண்டும்.