ஆடிப்பூரம் வழிபாட்டின் மகிமைகள்… யார் முக்கியமாக வழிபட வேண்டும் தெரியுமா…?

Published:

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். இந்த மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் சகல சௌபாக்யமும் கிட்டும் என்பது நம்பிக்கை. இது தவிர இன்னும் சில சிறப்பான நாட்கள் ஆடி மாதத்தில் உண்டு. அதில் ஒன்று தான் ஆடிப்பூரம் நாள்.

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் நாளன்று ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம் தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் அம்பாளுக்கு மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். இந்த நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். கண்ணாடி வளையல்களை மாலையாக கட்டி அம்மனுக்கு அணிவிப்பார்கள். அன்றைய தினம் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.

மேலும் உங்களுக்காக...