இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!

கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற…

dream

கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற முடியாது. அது சில நிமிடங்களில் நம் நினைவை விட்டு அகன்று விடும். கனவில் நிறைய பயந்தவர்களும் உண்டு. துள்ளிக் குதித்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர்களும் உண்டு.

இறந்தவர்கள் சிலருக்கு கனவில் வந்து தெரிவார்கள். அதை அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்பாங்க. அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்வார்கள். ஒவ்வொரு கனவுக்கும் அதற்குரிய பலன் உண்டு.

இறந்தவர்களில் அப்பா கனவில் வந்தால் தீர்க்க முடியாத பிரச்சனையை விரைவில் முடிப்பீர்கள் என்று அர்த்தம். தாய் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும். பெரியவர்கள் கனவில் வந்தால் அவர்கள் நம்மை நேராக வந்து ஆசிர்வதிப்பதாகும்.

இறந்தவர்களை சுமந்து செல்வது போல் கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரும். இறந்தவர்கள் நமது வீட்டில் வந்து தூங்குவது போல கனவு வந்தால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள். தாத்தாவுடன் பேசுவது போல கனவு வந்தால் ஆயுள் கூடும் என்று சொல்வார்கள்.

அதற்காக மேலே சொன்னது போல எதுவும் நடக்கும் என்றும் அப்படியே நம்பி விடாதீர்கள். எங்குமே உழைப்பு தான் நமக்கு வெற்றியைத் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.அதனால் தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேறினால் நமக்கு எப்போதுமே வெற்றி தான்.