மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!

  நிதி முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புவோருக்கு, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகின்றன. இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற…

investment

 

நிதி முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புவோருக்கு, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகின்றன. இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் உள்ள அபாயங்கள் இல்லாமல், நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.

டி.என்.இஃப்.சி.யின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், முதலீட்டாளர்களின் வசதிக்காக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குமுலேட்டிவ் டெபாசிட் (Cumulative Deposit): இந்தத் திட்டத்தில், முதலீடு செய்யப்பட்ட தொகைக்கான வட்டி, முதிர்வு காலம் வரை முதலீட்டுடன் சேர்ந்து அதிகரிக்கும். இதனால், முதலீட்டின் மீது வட்டிக்கு வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் முதலீடு மற்றும் வட்டி மொத்தமாகச் செலுத்தப்படும். இதில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ₹1,000 ஆகும்.

நான்-குமுலேட்டிவ் டெபாசிட் (Non-Cumulative Deposit): இந்த திட்டத்தில், வட்டி காலாண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இது, முதலீட்டின் மீது வழக்கமான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ₹5,000 ஆகும்.

டி.என்.இஃப்.சி.யின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வட்டி விகிதங்கள், முதலீட்டு காலம் மற்றும் முதலீட்டாளரின் வகையை பொறுத்து வேறுபடும்.

பொதுமக்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 8.5% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி சலுகைகள் உண்டு. குமுலேட்டிவ் டெபாசிட்டில், முதல் ஆண்டில் பயனுள்ள வட்டி விகிதம் 9.04% ஆக இருக்கும். முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் 24 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 60 மாதங்கள் வரை இருக்கும்.

டி.என்.இஃப்.சி. என்பது 100% பாதுகாப்பான அரசு நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தின் பாதுகாப்பு குறித்து எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை. தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் போன்றோர் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

டி.என்.இஃப்.சி.யின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அல்லது அலுவலகத்தில் பெறலாம்.