நாளைய(21/6/2020) தினம் வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மிக நீண்ட சூரிய கிரகணமாக இது அமையும். இனி இப்படி ஒரு நீண்ட சூரியகிரகணம் அமைய 21 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்..
சூரிய கிரகண நேரம்
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமையான நாளை இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு படிப்படியாக தொடங்கி மதியம் 3:05 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. கிரகணம் மொத்தம் 3 மணி 33 நிமிடங்கள் நீடிக்கிறது.
இந்த கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது.
முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது.
உச்சகட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு..
சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு
கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மனிக்கு
தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் , கோவையில் 10:12 மணிக்கும், மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்க.