சூரிய கிரகணத்தால் தோஷத்திற்கு ஆளாகும் நட்சத்திரங்களும், தோஷத்திற்கான பரிகாரங்களும்..

By Staff

Published:

சார்வாரி வருடம், ஆனி மாதம் ஏழாவது நாள், அதாவது ஆங்கில நாட்காட்டிப்படி 21.06.2020 ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம் ஆகின்றது. இந்த சூரிய கிரகணம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட ஆசியா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் நிகழ இருக்கின்றது..

fd9640ff1be1c6be74dc6862ea4ca554

இந்திய நேரப்படி 9.15க்கு சூரிய கிரகணம் ஆரம்பித்து, மதியம் 3.05க்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணத்தால் 5 நட்சத்திரங்கள் தோஷத்திற்கு உள்ளாகும் . அவ்வாறு தோஷத்திற்கு உள்ளாகும் நட்சத்திரங்கள் பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:

1. மிருகசீரிடம், 2. சித்திரை
3. அவிட்டம்
4. திருவாதிரை
5. ரோஹிணி.

சூரிய கிரகண தோஷமுடைய நட்சத்திரக்காரர்கள் கிரகணத்தன்று விரதமிருந்து கோதுமை, முழுஉளுந்து  வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலிற்கு சென்று வினாயகர், சூரியன், ராகு ஆகியோரிற்கு நெய் தீபமிட்டு வழிபட்டு பின்னர் மூலவரை வழிபட்ட பின்னர் இவற்றை பிராமணற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும். பிராமணரிற்கு தர முடியாவிட்டால் சூரிய பகவானின் பாதத்தில் கோதுமையையும், ராகு பகவானின் பாதத்தில் முழுஉளுந்தினையும்   வைத்து வழிபடலாம். இதனால் கிரகண தோஷ பாதிப்பு நீங்கும்.

இன்று கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு இருப்பதாலும், கோவில்கள் பூட்டி வைத்திருப்பதாலும் கோதுமை, முழுஉளுந்து  வாங்கி பூஜை அறையில் வைத்து அதை சுற்றி நெய், நல்லெண்ணை, வேப்பெண்ணை, விளக்கெண்ணை,  இலுப்பெண்ணை ஆகிய எண்ணைகளினால் தனித்தனி தீபமிட்டு 5 திசைகளை பார்க்குமாறு வைத்து சூரிய காயத்திரி மற்றும் ராகு காயத்திரி மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் கோதுமையையும் முழுஉளுந்தையும் அரைத்து அதனுடன் நாட்டு வாழைப்பழம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசைந்து பசுமாட்டிற்கு தானம் கொடுக்க வேண்டும். இதனால் கிரகணத்தால் தோஷமுடைய நட்சத்திரக்காரர்களின் கிரகண தோஷம் நீங்கும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

மேலும் உங்களுக்காக...

Leave a Comment