கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம்.
உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள் இருக்கும் மனசாட்சிக்குப் பயப்படுவது இல்லை. உண்மையான அன்பு என்றாலே கோபம், மனஸ்தாபம், கருத்து வேறுபாடு இருக்கத் தான் செய்யும். இவை எதுவும் இல்லையென்றால் அந்த அன்பு நிச்சயம் பொய்யாகத் தான் இருக்கும்.
யாராவது உங்களைப் பற்றித் தவறான அபிப்ராயம் வைத்திருந்தால் அவர்களிடம் சென்று விளக்கம் தராதீர்கள். அவர்களுக்கே கூடிய விரைவில் ஏதாவது ஒரு காட்சி மூலம் உங்களைப் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும்.
அந்த உண்மை யாரும் தராத அற்புதமான விளக்கம் அது. உங்களை யாரென்று அது தெரியப்படுத்தும்.இரண்டு விஷயங்கள் உங்களை வரையறுக்கின்றன.
உங்களிடம் எதுவும் இல்லாத போது உங்கள் பொறுமை. எல்லாம் இருக்கும் போது உங்கள் அணுகுமுறை. தேவையில்லாததைக் கிறுக்கி, சம்பந்தமில்லாததை உளறி, வேண்டுமென்றே சிரிப்பை வர வைத்து, தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் உளவியலைக் கவனியுங்கள். இழக்க முடியாததை இழந்திருப்பார்கள்.
ஓடுபவனுக்கு பல வழிகள் உண்டு. ஆனால், அவனைத் துரத்துபவனுக்கு ஒரே வழி தான் அவன் பின்னாடி தான் ஓட வேண்டும். எனவே துரத்துபவனாக இருக்காதீர். ஓடுபவனாக இருங்கள். விழுந்துப் போனாலும் பரவாயில்லை. மீண்டும் எழுந்து ஓடுங்கள். தோற்றாலும் பரவாயில்லை. நிமிர்ந்து நடங்கள். இங்கு வெற்றி என்பதே எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு வாழ்ந்தான் என்பதே. கடவுள் வாழ்வதற்கான நம்பிக்கையை தரட்டும்.
சிலர் நமக்காக நிறைய செய்வார்கள். ஆனால், ஒண்ணுமே பண்ணாத மாறி காட்டிக் கொள்வார்கள். அந்த அன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது.