கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. எளிமையான சில டிப்ஸ்!

By Velmurugan

Published:

கர்ப்பிணி பெண்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் பொதுவாக சிலருக்கு வாந்தி வரும். அதற்காக சாப்பிடாமல் இருக்க கூடாது.

ஒரே வேலையாக இல்லாமல் பல வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்..

மேலும் உணவில் பச்சை கறிகள்..பழங்கள் அதிகம் இருக்க வேண்டும்…

கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது…. உடல் சோர்வாக இருக்கும் போது… ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்… குமட்டல் வரும் போது… எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால் சரியாகும்…

பொதுவாக பேரிச்சை பழம் மாதுளை பழம் கீரைகள், முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையாக சத்துக்கள் கிடைக்கும் .

காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும்… மாதுளம் பழம் சாறு குடித்தால் இரத்தம் அதிகரிக்கும்.

ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிய  ஒரு அருமையான வேலை வாய்ப்பு!

வயிற்றில் குழந்தை இருக்கும் போது எளிதில் செரிமானமாகும் உணவுகளையே உட்க்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப தண்ணீரும் குடிக்க வேண்டும்.

உணவில் உப்பு , இனிப்புகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எளிய உடல் பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

டீ , காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Leave a Comment